தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்

தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக வணிக வரித்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்திருப்பது குறித்து...

அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன் - கோப்புப் படம்

Updated On :

தமிழ்நாட்டின் உண்மையான ஜிஎஸ்டி வருவாய் நடப்பு நிதியாண்டு முதல் அக்டோபர் வரை 15 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் செவ்வாய்க்கிழமை (நவ. 3) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லோகேஷ் தமிழ்செல்வன் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

ஜிஎஸ்டி புள்ளிவிவரங்களைக் குறிப்பிடும்போது அதன் அடிப்படையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

முதலாவது: மொத்த ஜிஎஸ்டி வசூல். இதில் எஸ்ஜிஎஸ்டி, மத்திய அரசின் சிஜிஎஸ்டி மற்றும் ஐஜிஎஸ்டி ஆகிய மூன்றும் அடங்கும். இதில் வசூலிக்கப்படும் ஐஜிஎஸ்டி முழுவதும் தமிழகத்திற்குச் சொந்தமான வருவாய் அல்ல; பிற மாநிலங்களுக்கான தொகையும் இதில் அடங்கும்.

இரண்டாவது: தமிழகத்தின் உண்மையான ஜிஎஸ்டி வருவாய். இது தமிழகத்தில் வசூலிக்கப்படும் எஸ்ஜிஎஸ்டி மற்றும் தமிழகத்திற்குப் பகிர்ந்தளிக்கப்படும் ஐஜிஎஸ்டி தொகை ஆகியவற்றின் கூட்டுத்தொகையாகும்.

2025 செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்ட ஜிஎஸ்டி விகித முறைப்படுத்தல் காரணமாகப் பல பொருட்களின் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. எனவே மொத்த ஜிஎஸ்டி வசூலில் ஏற்படும் சரிவை மட்டும் வைத்து மாநிலத்தின் பொருளாதாரத்தை மதிப்பிட முடியாது.

முக்கியமாக, தமிழகத்தின் உண்மையான ஜிஎஸ்டி வருவாய் நடப்பு நிதியாண்டில் அக்டோபர் வரை 15 சதவீதம் வளர்ச்சியையும் அக்டோபர் மாதத்தில் மட்டும் 8 சதவீதம் வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது.

ஒரு மொத்த வசூல் புள்ளிவிவரத்தை மட்டும் வைத்து தமிழ்நாட்டின் பொருளாதாரத்திற்கு எடைபோடுவது சரியான அணுகுமுறை அல்ல. உன்மையில் கடந்த ஐந்து ஆண்டில் அழிவு நிலையில் இருந்த தமிழ்நாட்டை, வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பை ஏற்றிருப்பவர்தான் எங்கள் முதல்வர் விஜய். எனவே, கவலைப்படாதீர்கள். நல்லவர்கள் கையில் தமிழ்நாடு உள்ளது என்று லோகேஷ் தமிழ்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Minister for Commercial Taxes Lokesh Tamilselvan stated on Tuesday (Nov. 3) that Tamil Nadu’s actual GST revenue has grown by 15 percent during the current financial year up to October.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.