திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: நவ. 24 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி வருகிற நவ. 24 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

திருவண்ணாமலை

Updated On :

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் திருக்கார்த்திகை மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு, நவ. 24-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கார்த்திகை அன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலின் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். அன்றைய தினம் 40 முதல் 50 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவது வழக்கம்.

இந்த நிலையில், திருவண்ணாமலையில் பக்தர்களின் வசதிக்காகவும் விழா ஏற்பாடுகளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வருகிற நவ. 24 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் வந்தனா கார்க் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, வரும் நவ. 24-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

அதேநேரம், இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, வரும் டிச. 5-ஆம் தேதி (சனிக்கிழமை) திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

District Collector Vandana Garg has declared a local holiday on November 24 in connection with the 'Thirukarthigai Maha Deepam' festival at the Arunachaleswarar Temple in Tiruvannamalai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.