ஆபாச குறுஞ்செய்தி: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ வீட்டிற்கு போலீசார் வருகை!கள்ளக்குறிச்சி ஆட்சியர் புகாரில் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு! காவல்துறை பதில்!மதுரையில் 144 தடை! ஆட்சியர், காவல் துணை ஆணையர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!தங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம் (நவ. 24) பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டு காவலில் வைப்பு!‘கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்க’ - மு.க. ஸ்டாலின்திருவண்ணாமலையில் இன்று மகா தீபம் ஏற்றம்!இன்று டெல்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசபரிமலை பம்பை நதியில் துணிகள், கழிவுகளை வீசினால் ரூ. 5,000 அபராதம்!வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள்: 2.23 லட்சம் விண்ணப்பங்கள் அளிப்பு

ஆபாச குறுஞ்செய்தி: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ வீட்டிற்கு போலீசார் வருகை!

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வீட்டிற்கு போலீசார் வருகை தந்துள்ளது பற்றி...

Police arrive at the residence of the TVK MLA from Kallakurichi on district collector issue

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் - கோப்புப் படம்

Updated On :

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வீட்டிற்கு போலீசார் வருகை தந்துள்ளனர்.

பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்திருந்த நிலையில் அமைச்சர் நிர்மல் குமார், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரும் எம்எல்ஏவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர்.

நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் விசாரணையிலும்கூட 'மாவட்ட ஆட்சியர் தரப்பில் இருந்து இன்னும் புகார் வரவில்லை' என்று தமிழக அரசு கூறியிருந்தது.

இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா, கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யிடம் இதுதொடர்பாக புகார் கொடுத்துள்ளார். காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

தொடர்ந்து, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தவெக அரசையும் முதல்வர் விஜய்யையும் கடுமையாக விமர்சிப்பதுடன் தவெக எம்எல்ஏவை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ளதையடுத்து தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் வீட்டிற்கு போலீசார் வருகை தந்துள்ளனர். அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Police arrive at the residence of the TVK MLA from Kallakurichi on district collector issue

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.