பஞ்சாப் தேர்தல்! பாஜக - சிரோமணி அகாலி தளம் கூட்டணி அறிவிப்பு!
பாஜக - சிரோமணி அகாலி தளம் கூட்டணி அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி...

பாஜக - சிரோமணி அகாலி தளம் கூட்டணி அறிவிப்பு - PTI
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிரோமணி அகாலி தளம் இணைந்ததாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
117 சட்டப் பேரவைத் தொகுதிகள் கொண்ட பஞ்சாபில் 2027 பிப்ரவரியில் தோ்தல் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த நிலையில், பாஜகவும் சிரோமணி அகாலி தளமும் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தன.
பிரதமா் நரேந்திர மோடியுடன் சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீா் சிங் பாதல் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இந்த நிலையில், பஞ்சாப்பில் இன்று செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த பாஜக தலைவர் நிதின் நவீன், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அகாலி தளத்தின் தலைவர் சுக்பீா் சிங் பாதல், கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
அப்போது பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மிக நீண்டகால கூட்டாளியான அகாலி தளம் மீண்டும் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும், சுக்பீா் சிங் பாதல்தான் முதல்வர் ஆவார் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் ஏற்கெனவே சிரோமணி அகாலி தளம் - பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்துள்ளது. சுமாா் 20 ஆண்டுகளுக்கு மேல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து வந்த சிரோமணி அகாலி தளம் கடந்த 2020-ஆம் ஆண்டு 3 வேளாண் சட்டங்கள் விவகாரத்தை முன்வைத்து கூட்டணியில் இருந்து வெளியேறியது. பின்னா், விவசாயிகளின் தொடா் போராட்டத்தால் அச்சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது.
பாதலின் மனைவி ஹா்சிம்ரத் கௌா் மத்திய அமைச்சராக இருந்தாா். பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டதையடுத்து அவா் அமைச்சா் பதவியில் இருந்து விலகினாா்.
Summary
Punjab Elections! BJP - Shiromani Akali Dal alliance announced!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


