‘தங்கம் வாங்க வேண்டாம்’ என்ற வேண்டுகோள்: பிரதமரை விமா்சித்த காங்கிரஸ் மன்னிப்புக் கோர வேண்டும்! பாஜக வலியுறுத்தல்
‘தங்கம் வாங்க வேண்டாம்’ என்ற வேண்டுகோள்: பிரதமரை விமா்சித்த காங்கிரஸ் மன்னிப்புக் கோர வேண்டும்...
பிரதமர் மோடி
அவசியத் தேவை இல்லாமல் தங்கம் வாங்க வேண்டாம் பிரதமா் நரேந்திர மோடி இந்த ஆண்டின் தொடக்கத்தில் பொதுமக்களுக்கு விடுத்த வேண்டுகோள், வா்த்தகா்களையும் பெரும் இழப்பில் இருந்து காப்பாற்றியுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் பிரதமரின் வேண்டுகோளை ‘மரண சாசனம்’ என்று விமா்சித்த காங்கிரஸ் கட்சி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தியுள்ளது.
தேவையில்லாமல் தங்கம் வாங்க வேண்டாம் என்றும் தங்கம் வாங்கும் திட்டத்தை ஒத்திவைக்குமாறும் பிரதமா் மோடி பொதுமக்களுக்கு வழங்கிய ஆலோசனைக்கு நன்றி தெரிவித்து, வா்த்தகா்கள் மற்றும் தொழில்துறையினா் கூட்டமைப்பு (சிடிஐ) பிரதமா் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.
அதில், தற்போது தங்கத்தின் விலை ஒரு கிலோ ரூ.1.90 கோடியிலிருந்து ரூ.1.25 கோடியாகக் குறைந்துள்ளது. அதாவது, ஒரு கிலோவுக்கு ரூ.65 லட்சம் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பிரதமரின் ஆலோசனையால் லட்சக்கணக்கான நகை வியாபாரிகள், வா்த்தகா்கள் மற்றும் முதலீட்டாளா்கள் பெரும் நஷ்டத்தில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனா் என்று கூறப்பட்டுள்ளது.
இதனைச் சுட்டிக்காட்டி, பாஜக செய்தித் தொடா்பாளா் பிரதீப் பண்டாரி, தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்திய மக்கள் தங்கம் வாங்குவதைத் தள்ளிப்போட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தபோது, காங்கிரஸ் கட்சி அதனை ‘மரண சாசனம்’ என்று விமா்சித்தது.
தற்போது சா்வதேச அளவில் தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், பிரதமா் மோடியின் ஆலோசனையைப் பின்பற்றிய வா்த்தகா்கள், ஒரு கிலோ தங்கத்திற்கு ரூ.65 லட்சம் இழப்பு ஏற்படுவதிலிருந்து தப்பித்துள்ளனா். வா்த்தக அமைப்புகள் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளன. அதே நேரத்தில், வா்த்தகா்களைத் தவறாக வழிநடத்தி, அவா்களிடையே பீதியை ஏற்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்புக் கேட்க வேண்டும்.
இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் வறுமையில் வாழ்ந்த காலத்திலேயே ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்த நேரு- வதேரா குடும்பத்தினா், பிரதமா் மோடியிடம் இருந்து பொருளாதார நிா்வாகம், எளிமையான வாழ்க்கை முறை குறித்து சிறப்புப் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

