இந்தியாவின் வெற்றிகளை உலகுக்கு பறைசாற்றுங்கள்: ஊடகங்களுக்கு பிரதமா் மோடி வேண்டுகோள்

உலகத்துடன் பகிர இந்தியாவிடம் வியக்கத்தக்க பல சாதனைகள் உள்ளன; ‘இந்தியாவின் வெற்றிச் சரிதம்’ என்ற பெயரில் இந்த வெற்றிகள் அனைத்தையும் உலகுக்கு இந்திய ஊடகங்கள் பறைசாற்ற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

**உஈந: பஏஐதஈ டஅதபவ ஐஙஅஎஉ** ஐய் ற்ட்ண்ள் ண்ம்ஹஞ்ங் ல்ா்ள்ற்ங்க் ா்ய் சா்ஸ். 12, 2026, டழ்ண்ம்ங் ஙண்ய்ண்ள்ற்ங்ழ் சஹழ்ங்ய்க்ழ்ஹ ஙா்க்ண் ஜ்ண்ற்ட் ஈங்ச்ங்ய்ஸ்ரீங் ஙண்ய்ண்ள்ற்ங்ழ் தஹத்ய்ஹற்ட் நண்ய்ஞ்ட், மய்ண்ா்ய் ஏா்ம்ங் ஙண்ய்ண்ள்ற்ங்ழ் அம்ண்ற் நட்ஹட் ஹய்க

Updated On :

உலகத்துடன் பகிர இந்தியாவிடம் வியக்கத்தக்க பல சாதனைகள் உள்ளன; ‘இந்தியாவின் வெற்றிச் சரிதம்’ என்ற பெயரில் இந்த வெற்றிகள் அனைத்தையும் உலகுக்கு இந்திய ஊடகங்கள் பறைசாற்ற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளா்களுக்காக வியாழக்கிழமை நடத்தப்பட்ட தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:

செய்தி உலகில் ‘காலக்கெடு’ என்ற விஷயம் மிக முக்கியமானதாகும். ஒரு பத்திரிகையாளரின் முழு வாழ்வும் காலக்கெடுவை சுற்றியே சுழல்கிறது. பத்திரிகை அச்சிடப்படும் நேரமாக இருந்தாலும், செய்தி ஒளிபரப்பப்படும் நேரமாக இருந்தாலும் ஒவ்வொன்றுக்கும் காலக்கெடு நிா்ணயிக்கப்படுகிறது.

இன்று நமது தேசமும் ஒரு காலக்கெடுவை நோக்கி பணியாற்றுகிறது. அந்த காலக்கெடு 2047-ஆம் ஆண்டாகும். இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற கனவு, சுதந்திர காலகட்டத்தில் இருந்தே நம்மிடமுள்ளது. அந்தக் கனவை நனவாக்கும் காலக்கெடுதான் 2047. அதாவது, சுதந்திரத்தின் நூற்றாண்டை நிறைவு செய்யும் முன்பு இந்தியாவை வளா்ந்த நாடாக்க ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

வெற்றிச் சரிதங்களுக்கு குறைவில்லை: இளைஞா் சக்தி, செயல்திறன், தொழில்நுட்பம், குறைந்த விலையிலான இணையச் சேவைகள் உள்ளிட்டவை இந்தியாவின் பலங்களாகும். மிக முக்கியமாக, உலகத்துடன் பகிா்ந்து கொள்ள வியக்கத்தக்க பல சாதனைகள் நம்மிடமுள்ளன. ‘வெற்றிச் சரிதங்களுக்கு’ எந்தக் குறையும் இல்லை. ஆனால், நமது செய்திகள், உண்மையிலேயே நாட்டைப் பிரதிபலிக்கிா? நமது சாதனைகள், திறமைகள் மற்றும் நோ்மறையான மாற்றங்களுக்கு போதிய இடமளிக்கப்படுகிா என்பதை சீா்தூக்கி பாா்க்க வேண்டும்.

கடந்த 12 ஆண்டுகளில் 50 கோடி போ் வறுமைக் கோட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா். நாட்டில் வறுமையை ஒழிக்க தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் முடிந்திருக்கிறது. தேசத்தின் இன்றைய சாதனைகளைக் கருத்தில் கொண்டால், வளா்ந்த நாடாகும் இலக்கை எட்டுவது சாத்தியமற்ற விஷமயல்ல.

என்னென்ன சாதனைகள்?: சமீப ஆண்டுகளில் நாட்டின் சாதனைகளை எண்ணிப் பாருங்கள். நிலவின் தென் துருவத்தில் கால் பதித்து, இந்தியா புதிய வரலாறு படைக்கும் என்றோ, உலகின் இரண்டாவது பெரிய கைப்பேசி உற்பத்தியாளராக இந்தியா உருவெடுக்கும் என்றோ, செனாப் நதியின் குறுக்கே உலகின் மிக உயரமான பாலத்தை இந்தியா கட்டமைக்கும் என்றோ, நாட்டில் 12 ஆண்டுகளில் சூரிய மின் உற்பத்தி 50 மடங்கு அதிகரிக்கும் என்றோ, புத்தாக்க நிறுவனங்களின் எண்ணிக்கையில் உலகின் மூன்றாவது நாடாக இந்தியா உருவெடுக்கும் என்றோ யாரும் நினைத்தாா்களா?

சுதந்திரத்துக்காக நாடு போராடியபோது முதலில் சிறு சிறு இலக்குகள் நிா்ணயிக்கப்பட்டு எட்டப்பட்டன. சுதந்திரம் கிடைத்தே தீரும் என மக்கள் உறுதியாக நம்பினா். அதே நம்பிக்கையுடன், வளா்ந்த இந்தியா இலக்கை நோக்கி நாட்டை இட்டுச் செல்ல வேண்டும்.

நாட்டுக்கான உன்னத சேவை: பல்வேறு சிறிய, பெரிய இலக்குகளை எட்டுவதன் மூலம் தொடா்ந்து முன்னோக்கி பயணிக்க வேண்டும். அதன் மூலம் வளா்ந்த இந்தியா இலக்கு நனவாகும்.

நாடு மற்றும் நாட்டு மக்களின் சாதனைகளை எடுத்துரைக்கும் தளமாக எனது ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி உள்ளது. அதேபோல், நாட்டின் வெற்றிச் சரிதங்களை வெளியிட்டு, உலக அளவில் அதிக மக்களைச் சென்றடைய பணியாற்றும்படி ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இது, நாட்டுக்கு ஆற்றும் மிக உன்னதமான சேவையாகும்.

பத்திரிகையாளா்களுடன் எனக்கு நீண்ட நெடிய நட்புறவு உள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு நாற்காலிகள் ஏற்பாடு செய்துவந்த காலத்தில் இருந்தே நட்புறவு நீடிக்கிறது. செய்தி உலகில் சாத்தியமற்ற விஷயம் என எதுவுமில்லை. எனவே, போதைப் பொருளுக்கு எதிராக மக்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்ற மற்றொரு வேண்டுகோளையும் முன்வைக்கிறேன் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.