பிலிப்பின்ஸுக்கு அடுத்த வாரம் பிரதமா் மோடி பயணம்: இந்தியா - ஆசியான் மாநாட்டில் பங்கேற்கிறாா்
பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள இந்தியா-ஆசியான் வருடாந்திர மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

நரேந்திர மோடி
பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள இந்தியா-ஆசியான் வருடாந்திர மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
11 உறுப்பினா்களைக் கொண்ட ஆசியான் கூட்டமைப்புக்கு நிகழாண்டு பிலிப்பின்ஸ் தலைமை வகிக்கும் நிலையில், மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக அந்நாட்டுக்கு நவ.16-ஆம் தேதி செல்லும் பிரதமா் மோடி வருடாந்திர கிழக்காசியா மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளாா்.
மேலும், மணிலாவில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உறுப்பினராகக் கொண்ட ‘க்வாட்’ கூட்டமைப்பின் வருடாந்திர மாநாடும் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து அதிகாரபூா்வ தகவல்கள் வெளியாகவில்லை.
இதுதொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செயலா் (கிழக்கு) ருத்ரேந்திர டாண்டன் கூறியதாவது: மணிலாவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள 23-ஆவது ஆசியான்-இந்தியா வருடாந்திர மாநாடு மற்றும் ஆசியான் தலைமையிலான கிழக்காசிய மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளாா். பிலிப்பின்ஸுக்கு நவ.16 முதல் நவ.18 வரை அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் அவா், நவ.17-ஆம் தேதி இந்த இரு மாநாடுகளிலும் பங்கேற்கிறாா்.
பயணத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு துறைகளில் இந்தியா-பிலிப்பின்ஸ் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பிலிப்பின்ஸ் அதிபா் ஃபொ்டினண்ட் மாா்கோஸுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

