சென்னையில் 12 மினி தாலுகா அலுவலகங்கள் அமைக்க முதல்வர் விஜய் உத்தரவு!சென்னையிலேயே இப்படி ஒரு அசம்பாவிதம்; இது முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறமையின்மை! இபிஎஸ்தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி டிஜிபியிடம் திமுக புகார்!அரவிந்த் கேஜரிவாலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல்!அன்பில் மகேஸ் வழக்கு! முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாருக்கு 5 நாள்கள் போலீஸ் காவல்!மதுரை பிரபல நகைக் கடையில் 500 சவரன் கொள்ளை!9.5 சிஜிபிஏ மாணவர்களுக்கு திருப்பதியில் இலவச தரிசனம்! விநோத அறிவிப்பை வெளியிட்ட கல்லூரிபுதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து! 22 பயணிகள் காயம்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை! பண்டிகை நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட முடிவு?ஜம்முவில் காணாமல்போன சிறப்பு காவல் அதிகாரிகள் சடலமாக மீட்பு!நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்!இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!சம்பா நெற்பயிா்க் காப்பீட்டு காலவரம்பு டிச. 1 வரை நீட்டிப்புஉபோ் செயலியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸிகள் இயக்கப்படாது!

சென்னையில் 12 மினி தாலுகா அலுவலகங்கள் அமைக்க முதல்வர் விஜய் உத்தரவு!

8 வட்டங்களில் ரூ. 2.14 கோடி மதிப்பீட்டில் 12 சிறுவட்ட அலுவலகங்கள் அமைக்க முதல்வர் உத்தரவிட்டிருப்பது குறித்து....

முதல்வர் விஜய்

முதல்வர் சி. ஜோசப் விஜய் - படம்: சட்டப்பேரவை

Updated On :

சென்னை மாவட்ட வருவாய் அலகிற்குள்பட்ட 8 வட்டங்களில்
ரூ. 2.14 கோடி மதிப்பீட்டில் 12 சிறுவட்ட அலுவலகங்கள்
(Mini Taluk Offices) அமைக்க முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்கள் அனைவருக்கும் எளிதில் நேரடியாகச் சென்றடையும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. 

அரசு சேவைகளை முழுமையாக டிஜிட்டல்மயமாக்கி, பொதுமக்களுக்கு எளிதான, விரைவான, வெளிப்படையான மற்றும் நம்பகமான சேவையை வழங்குவது தமிழ்நாடு அரசின் நோக்கமாகும். அதன்படி, தமிழ்நாடு அரசு இணையவழி சான்றிதழ் வழங்கும் முறையை விரிவுபடுத்தி வருகிறது.

மேலும், வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, வகுப்புச் சான்று,
முதல் பட்டதாரி சான்று, வாரிசு சான்று, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உள்ளிட்ட 26 சேவைகளை இணையவழி மூலம் எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் விண்ணப்பித்துப் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  

தமிழ்நாட்டில் ஏனைய மாவட்டங்களைவிட, மாநிலத்தின் தலைநகரமாக உள்ள சென்னை மாவட்டத்தில் அதிக மக்கள்தொகை உள்ளதால், வருவாய்த்துறை சார்ந்த இணையவழி சேவைகள் மற்றும் இதர நிலம் தொடர்பான சேவைகளைப் பொதுமக்கள் சிரமமின்றி விரைந்து பெறுவதற்கு ஏதுவாக சிறுவட்ட அலுவலகங்கள் உருவாக்க வேண்டியதன் அவசியம் கருதி, முதல்வரின் அறிவுறுத்தலின்படி, 2026-27ஆம் நிதியாண்டிற்கான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கையின்போது “பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் இருப்பிடங்களுக்கு அருகிலேயே தங்களுக்கான சேவைகளைப் பெறும் வகையில் சென்னையில் 12 சிறுவட்ட அலுவலகங்கள் அமைக்கப்படும்” என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினைச் செயல்படுத்திடும் வகையில், அதிக மக்கள்தொகை கொண்ட  சென்னை மாவட்டத்தில், வருவாய்த்துறையைச் சார்ந்த அனைத்து சேவைகளையும் பொதுமக்கள் எவ்வித சிரமங்களுமின்றி தங்களது இருப்பிடங்களுக்கு அருகாமையிலேயே எளிதில் பெறும் வகையிலும் 2.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துணை வட்டாட்சியர் (Deputy Tahsildar) தலைமையில் 12 சிறுவட்ட அலுவலகங்கள் (Mini Taluk Offices) அமைக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி, சென்னை மாவட்டத்திலுள்ள 8 வட்டங்களில் பெரம்பூர் வட்டத்திற்குள்பட்ட கொடுங்கையூர் மற்றும் எருக்கஞ்சேரி, மதுரவாயல் வட்டத்திற்குட்பட்ட போரூர், அம்பத்தூர் வட்டத்திற்குள்பட்ட முகப்பேர் மற்றும் கொரட்டூர், மாம்பலம் வட்டத்திற்குள்பட்ட சாலிகிராமம், சோழிங்கநல்லூர் வட்டத்திற்குள்பட்ட நீலாங்கரை, பள்ளிக்கரணை
மற்றும் சோழிங்கநல்லூர், வேளச்சேரி  வட்டத்திற்குள்பட்ட
திருவான்மியூர் - பெசன்ட் நகர், மயிலாப்பூர் வட்டத்திற்குள்பட்ட திருவல்லிக்கேணி மற்றும்  ஆலந்தூர் வட்டத்திற்குள்பட்ட மணப்பாக்கம் ஆகிய 12 சிறுவட்ட அலுவலகங்கள் (Mini Taluk Offices) அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.