சட்டம் - ஒழுங்கு பிரச்னை! பண்டிகை நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட முடிவு?
பண்டிகை நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட முடிவெடுக்கப்பட்டிருப்பதாக தகவல்...

முதல்வா் ஜோசப் விஜய் - கோப்புப் படம்
சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை குறைக்க பண்டிகை நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீபாவளி பண்டிகை நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் தமிழ்நாட்டில் 8 கொலைச் சம்பவங்கள் நடந்தது மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. தொடர்ந்து அடுத்த 2 நாள்களும் கொலைச் சம்பவங்கள் அதிகரித்து காணப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் காவல்துறை தரப்பில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நூற்றுக்கணக்கான ரெளடிகள் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து முதல்வா் ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டத்தை செவ்வாய்க்கிழமை நடத்தினாா். தலைமைச் செயலா் சாய்குமாா், உள்துறைச் செயலா் காா்த்திக், காவல் துறை தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி அன்பு, உளவுப் பிரிவு ஐஜி அஸ்ரா காா்க் உள்ளிட்ட காவல் துறை உயா் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் பண்டிகை நாள்கள் மற்றும் அதற்கு முந்தைய நாளில் டாஸ்மாக் கடைகள மூடுவது தொடர்பாக முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தியிருப்பதாகவும், இதுதொடர்பாக அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீபாவளி பண்டிகை அன்று மற்றும் அதனையொட்டி நடந்த பெரும்பாலான கொலைகள் மதுபோதையில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Law and order issue! Decision to close TASMAC shops during festival days?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

