மேக்கேதாட்டு அணை: டி.கே. சிவகுமாருக்கு பதிலளிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் விஜய் - அதிமுக கண்டனம்!தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழ்நாடு காவல்துறை விளக்கம்திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்சட்டம்-ஒழுங்கு ஐசியு-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்! மு.க. ஸ்டாலின் விமர்சனம்செய்தித்தாள்களில் முதல்வர் புகைப்படம்; விளம்பரத்துக்காக ரூ. 473 கோடி செலவிட்ட கர்நாடகம்: பாஜக குற்றச்சாட்டு!அகல்விளக்கு வங்கிக் கணக்கை முடக்குக! வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்விஐஏஎஸ் அதிகாரிக்கே பாதிப்பு! எதற்கும் பொறுப்பேற்காமல் ஸ்லீப் மோடில் முதல்வர் விஜய்! உதயநிதிகோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!தவெக எம்எல்ஏ மீது மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை! ராஜ்மோகன்சென்னையில் ஒரே நாளில் 36 ரெளடிகள் கைது!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி: தவெக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை தேவை! ஜோதிமணிகுரூப் 4 தேர்வுக்கு 14.89 லட்சம் பேர் விண்ணப்பம்! நாளை வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்!சபரிமலை பக்தர்களுக்காக சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் அறிவிப்பு!மூன்றாவது மனைவியையும் விவாகரத்து செய்தார் பவன் கல்யாண்!தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் நாளை ஆலோசனை!

'ஏரி' இணையதளத்தைத் தொடங்கிவைத்தார் முதல்வர் விஜய்!

நீர்நிலைகள் புனரமைப்பது மற்றும் பாதுகாப்பது தொடர்பாக புதிய இணையதளத்தை முதல்வர் விஜய் தொடங்கிவைத்தது பற்றி....

CM vijay

'ஏரி' இணையதளத்தைத் தொடங்கிவைத்தார் முதல்வர் விஜய்! - DIPR

Updated On :

தமிழ்நாட்டின் நீர்நிலைகள் புனரமைப்பில் அரசுசாரா அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க, இணையவழியில் தடையின்மைச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான “ஏரி” இணையதளத்தை முதல்வர் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைத்து, அரசுசாரா அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குத் தடையின்மைச் சான்றிதழ்களை வழங்கினார்.

இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

முதல்வர் ச. ஜோசப் விஜய் இன்று (10.11.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் நீர்நிலைகள் புனரமைப்பில் அரசுசாரா அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க, இணையவழியில் தடையின்மைச் சான்றிதழ்களைப் பெறுவதற்காக நீர்வளத் துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள 'ஏரி' இணையதளத்தைத் ( https://eri.tn.gov.in/) தொடங்கி வைத்தார்.

மேலும், நீர்நிலைகளைப் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள அரசுசாரா அமைப்புகளுக்குத் தடையின்மைச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதியுதவியுடன் நீர்நிலைகளைப் புனரமைக்க விரும்பும் அரசுசாரா அமைப்புகளும், தன்னார்வலர்களும் பல்வேறு அரசுத் துறைகளிடம் தடையின்மைச் சான்றிதழ் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் களையுமாறு முதல்வரிடம் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில், நீர்நிலைகளைப் புனரமைக்க எளிமையான முறையில் தடையின்மைச் சான்றிதழ் வழங்குவதற்காக நீர்வளத் துறையால் “ஏரி” இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஐந்து அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நீர்நிலைகளின் விவரங்கள் இந்த ஒரே இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. நீர்நிலைகளைத் தூர்வாருதல், கரைகளைப் பலப்படுத்துதல், அனுமதிக்கப்பட்ட சிறிய மேம்பாட்டுப் பணிகளைச் செய்தல் ஆகியவற்றுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

இதனால், நீர்நிலைகளின் நீர்சேமிப்புத் திறனும், செயல்பாடும் மேம்படும். தற்போதுள்ள நேரடி விண்ணப்ப முறைக்குப் பதிலாக, இணையதளத்தின் மூலம் வெளிப்படையான, குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்கும் முறை அறிமுகமாகியுள்ளது. தகுதியான விண்ணப்பங்களுக்கு 15 நாட்களுக்குள் சான்றிதழ்களை வழங்குவதே இதன் இலக்காகும். டிஜிட்டல் தொழில்நுட்பம், சிஎஸ்ஆர் (CSR) நிதி மற்றும் தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் இம்முயற்சி, நீர்நிலைகளைப் புனரமைப்பதில் அதிகமானோர் பங்கேற்க வழிவகுக்கும்.

மேலும், மாநில நீர்வள மேலாண்மை முகமையின் (SWaRMA) தலைமைப் பொறியாளர் மற்றும் இயக்குநர், விண்ணப்பப் பரிசீலனை, ஒப்புதல், கண்காணிப்பு, துறைகளுடனான ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கான அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீர்நிலைகளைப் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக சிறுதுளி (Siruthuli), இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை (Environmental Foundation of India), எக்ஸ்னோரா சர்வதேச அறக்கட்டளை (Exnora International Foundation), மெகா அறக்கட்டளை (Mega Foundation) மற்றும் தானம் அறக்கட்டளை (Dhan Foundation) ஆகிய அரசுசாரா அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு முதல்வர் இன்று தடையின்மைச் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சீ. ரமேஷ், வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Summary

Chief Minister Vijay launched the Eri website

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.