அரவிந்த் கேஜரிவாலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல்!அன்பில் மகேஸ் வழக்கு! முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாருக்கு 5 நாள்கள் போலீஸ் காவல்!மதுரை பிரபல நகைக் கடையில் 500 சவரன் கொள்ளை!9.5 சிஜிபிஏ மாணவர்களுக்கு திருப்பதியில் இலவச தரிசனம்! விநோத அறிவிப்பை வெளியிட்ட கல்லூரிபுதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து! 22 பயணிகள் காயம்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை! பண்டிகை நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட முடிவு?ஜம்முவில் காணாமல்போன சிறப்பு காவல் அதிகாரிகள் சடலமாக மீட்பு!நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்!இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!சம்பா நெற்பயிா்க் காப்பீட்டு காலவரம்பு டிச. 1 வரை நீட்டிப்புஉபோ் செயலியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸிகள் இயக்கப்படாது!

அன்பில் மகேஸ் வழக்கு! முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாருக்கு 5 நாள்கள் போலீஸ் காவல்!

முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாருக்கு 5 நாள்கள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டிருப்பது பற்றி...

Muthukumar

முத்துக்குமார் - Dinamani

Updated On :

தனியார் பள்ளிகளிடம் ரூ. 400 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றதாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாரை, 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி அளித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி, பணம் பெற்று மோசடி செய்தாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு தரப்பில் அளித்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

400 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சமாக வசூலித்ததாக கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார், தற்போது திமுகவில் இருக்கும் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அன்பில் மகேஸ் கைதான நிலையில், சென்னை ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன்பு முத்துக்குமார் அக்டோபர் 29 ஆம் தேதி சரணடைந்த நிலையில், நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், முத்துக்குமாரை 5 நாள்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க கோரி மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி சத்தியமூர்த்தி முன்பு விசாரணை நடைபெற்று, தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.

இந்த மனுவில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி, முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகுமாரை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். இன்று பகல் 1 மணி முதல் 16ஆம் தேதி வரை விசாரிக்க அனுமதி அளித்த நீதிபதி, மீண்டும் நவம்பர் 16ஆம் தேதி காலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

முத்துகுமாரிடம் விசாரணை செய்யும்போது, அவரது வழக்கறிஞர் கவனிக்க அனுமதி அளித்தும்; உடலளவிலோ மனதளவிலோ துன்புறுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, இன்றுடன், முடிவடைந்த நீதிமன்ற காவலை நவம்பர் 26ஆம் தேதி வரை நீட்டித்தும் நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

Summary

Anbil Mahesh case! Former MLA Muthukumar remanded to 5 days of police custody!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.