துயரமான ஆட்சி; கும்பகர்ண தூக்கத்தில் அரசு! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!தவெக எம்எல்ஏக்கள் 3 நாள்கள் தனியார் விடுதியில் தங்க ஏற்பாடு?என்ன, நீதா அம்பானி குடிக்கும் தண்ணீர் பாட்டில் விலை ரூ.50 லட்சமா? உண்மை என்ன?ஆண் பல முறை திருமணம் செய்யலாம்! ஆனால்... பவன் கல்யாண் குறித்து ரேணு தேசாய்கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் பாவம்! மாணிக்கம் தாகூர்இரண்டு முறை புற்றுநோய் பாதிப்பு... முதன்முறையாக மனம் திறந்தார் சோனியா! சுயசரிதை புத்தகத்தில்சென்னையில் நேற்று மட்டும் 147 ரெளடிகள் கைது!ஐபிஎல் டிரேடிங்! பஞ்சாப் கிங்ஸில் இணைந்தார் ஹார்திக் பாண்டியா! மும்பையில் அர்ஷ்தீப்!மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்! நாளை (நவ. 12) இரவுக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்!இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்!2024-ஆம் ஆண்டு குரூப்-4 தோ்வு: வனக்காவலா் பதவிக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு பட்டியல் வெளியீடு!டாஸ்மாக் ஊழியா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம்!பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன்?: சுயசரிதையில் சோனியா தகவல்!உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை ரூ.548 கோடி: உடனடியாக வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை!தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புஅகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு6,574 பணியிடங்கள்: குரூப் 4 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி!

ரூ. 100 கோடி மோசடி: முத்துக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி மனு; தீர்ப்பு ஒத்திவைப்பு!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்க லஞ்சம் பெற்றதாக பதிவான வழக்கில் சரணடைந்த முத்துக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு...

anbil mahesh

அன்பில் மகேஸ் - கோப்புப் படம்

Updated On :

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்க லஞ்சம் பெற்றதாக பதிவான வழக்கில் சரணடைந்த முத்துக்குமாரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார், தற்போது திமுகவில் இருக்கும் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார், சென்னை ஊழல் தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன் அக்டோபர் 29 ஆம் தேதி சரணடைந்தார். அவரை நவம்பர் 12 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், முத்துக்குமாரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது முத்துகுமார் தரப்பில், போலீஸ் காவல் வழங்கும்பட்சத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றி விசாரணையை விடியோ பதிவு செய்வது, வழக்கறிஞருடன் இருக்க அனுமதிப்பது போன்ற விதிமுறைகளை பின்பற்ற உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

விசாரணை அதிகாரி செந்தில், சாட்சி கூண்டில் ஏறி, முத்துகுமாரை காவலில் எடுக்க வேண்டியது ஏன் என விளக்கம் அளித்தார்.

அப்போது அவர், டிபிஐ அலுவலகத்தில் உள்ள அறையும், அரசு வாகனமும் எப்படி முத்துக்குமாருக்கு வழங்கப்பட்டது?, முத்துக்குமார் பணத்தை ஒப்படைத்த விவரங்கள் மற்றும் பணத்தை வைத்திருந்த இடைத்தரகர்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

நேரடியாக நீதிமன்றத்தில் சரணடைந்த முத்துக்குமாரிடம் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை. பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணம், அவரது வீட்டில் இருந்து அன்பில் மகேஸிடம் எப்படி கொண்டு சேர்க்கப்பட்டது என்பது தொடர்பாக விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார்.

இதற்கிடையில், முத்துக்குமாரின் நீதிமன்ற காவல் நாளையுடன் முடிவடைய உள்ளதால், காவல் நீட்டிப்புக்காக நாளை பிற்பகல் 12 மணிக்கு அவரை ஆஜர்படுத்த காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Summary

Rs. 100 crore fraud: Plea filed seeking police custody of Muthukumar for interrogation; verdict reserved

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.