நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு!தேனி சிறைச் சம்பவம்! 1995-ல் சுரங்கம் தோண்டி தப்பிய 43 கைதிகள்! புரட்டப்படும் வரலாறு!நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!ரிலையன்ஸ் முதல் ஐடி பங்குகள் வரை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!எஸ்ஐஆர் ரத்து உள்ளிட்ட 9 கோரிக்கைகள்: குடியரசுத் தலைவருக்கு மு.க. ஸ்டாலின் மனு!முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி! பசும்பொன் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!4 மாநிலங்களில் 28 எம்எல்சி தேர்தல் முடிவுகள்! காங்கிரஸ் பூஜ்ஜியம்!இந்திய சென்டிரல் வங்கியில் ரூ.14 கோடி மாயம், 187 பரிவர்த்தனைகள்! திருடியது எப்படி? யார்?உ.பி. எம்எல்சி தேர்தல்! மோடியின் வாரணாசி தொகுதியில் சமாஜவாதி வெற்றி!தேனி சிறையிலிருந்து தப்பிய மேலும் 2 கைதிகள் பிடிபட்டனர்! இதுவரை 15 பேர் கைது!இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது!தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை! மு.க. ஸ்டாலின் இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை ஆந்திரத்தில் மீட்பு!

ரூ. 100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸை காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மனு!

மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது குறித்து...

Anbil Mahesh

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி - கோப்புப் படம்

Updated On :

ரூ. 100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை 5 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த தி.மு.க. ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க சுமார் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் அப்போதைய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், அன்பில் மகேஸ் பொய்யாமொழியை 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், தலைமறைவாக உள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துகுமார் உடனான தொடர்புகள், யார் யாரிடம் எவ்வளவு பணம் பெறப்பட்டுள்ளது, வேறு யார் இதில் இடைதரகர்களாக செயல்பட்டுள்ளனர், பணப்பரிமாற்றங்கள் குறித்தும் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அவரை 5 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனு, நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன்பு நாளை (அக். 29) விசாரணைக்கு வரவுள்ள நிலையில், காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய மனு குறித்து காவல் துறை தரப்பில் முறையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

The Central Crime Branch police have filed a petition in a special court in Chennai, seeking permission to take former minister Anbil Mahesh Poyyamozhi—who was arrested in a case involving the receipt of a Rs. 100 crore bribe—into police custody for five days for interrogation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.