இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!
இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கியது பற்றி...
இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்
சென்னையில் இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜோசப் விஜய் புதன்கிழமை வழங்கினார்.
சென்னை கிண்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட முதல்வர் விஜய், புதிய திறன் பயிற்சி ஆய்வகங்களை திறந்துவைத்தார்.
பின்னர், திறன் பயிற்சி ஆய்வகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட படைப்புகளை பார்வையிட்ட அவர், மாணவர்களின் திறமையைப் பாராட்டி, அவர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
தொடர்ந்து, அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இளநிலை பயிற்சி அலுவலர்கள் பணிகளுக்காக 673 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
மேலும், அகில இந்திய தொழிற்தேர்வுகளில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி முதல்வர் விஜய் பாராட்டினார்.
இந்த நிகழ்வில், அரசு ஐடிஐ வளாகங்களில் ஸ்னைடர் எலக்ட்ரிக் நிறுவனம் சார்பில் ரூ. 12.6 கோடி மதிப்பிலான நவீன மின் ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் விஜய் முன்னிலையில் பரிமாற்றம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சென்னை ஐடிஐ வளாகத்துக்கு வெளியே கூடியிருந்த மக்களை நடந்துசென்று முதல்வர் விஜய் சந்தித்தார்.
Summary
Chief Minister Vijay handed out appointment orders to junior training officers!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


