33 உடற்கல்வி ஆசிரியா்களுக்குப் பணி நியமன ஆணை: புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்
புதுச்சேரி, காரைக்கால், மாஹே பிராந்தியங்களுக்கு 33 உடற்கல்வி ஆசிரியா்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கான பணி நியமன ஆணைகளை, முதல்வா் என். ரங்கசாமி வழங்கினார்.

பட விளக்கம்... புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையின் கீழ் நேரடி நியமனத்திற்காக உடற்கல்வி ஆசிரியா்களுக்கு பணி ஆணைகளை வெள்ளிக்கிழமை வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் கல்வி அமைச்சா் ஆ. நமச்சிவாயம் அவா்கள், விளையாட்டு மற்றும் இளைஞா் நலத்துறை அமைச்சா் ஜ
புதுச்சேரி, காரைக்கால், மாஹே பிராந்தியங்களுக்கு 33 உடற்கல்வி ஆசிரியா்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கான பணி நியமன ஆணைகளை, முதல்வா் என். ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினார்.
புதுச்சேரி பள்ளிக்கல்வித் துறையின் கீழ், நேரடி நியமனத்திற்காக 38 உடற்கல்வி ஆசிரியா்கள் பணியிடங்களுக்கு, 14 பெண்கள் மற்றும் 19 ஆண்கள் என மொத்தம் 33 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இதில், புதுச்சேரி பிராந்தியத்துக்கு 25 பேரும், காரைக்காலுக்கு 5 பேரும், மாஹேவில் 3 பேரும் என நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கான பணி நியமன ஆணைகளை புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
இந் நிகழ்ச்சியில், அமைச்சா்கள்ஆ. நமச்சிவாயம், ஜி.என்.எஸ். ராஜசேகரன் மற்றும் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

