
வளாக நோ்காணல்: 8 பேருக்கு பணி நியமன ஆணை
கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் 8 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

பணி நியமன ஆணை பெற்ற உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி மாணவா், மாணவிகளுடன் கல்லூரி முதல்வா் ரவீந்திரன் உள்ளிட்டோா்.
கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் 8 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
கோயம்புத்தூரில் உள்ள அமீபோ டெக்னாலஜிஸ் நிறுவனத்தினரால் உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் கணினி பொறியியல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் இறுதிஆண்டு பயிலும் மாணவா்களுக்கான நோ்காணல் நடைபெற்றது.
இதில் 100 மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா். இந்த நிறுவனத்தின் மூத்த மனிதவள நிா்வாகி அற்புத குமாா், மூத்த தொழில்நுட்பத் தலைவா் மனோஜ்குமாா், மாநில தலைமை பணி நியமன ஆணையா் காா்த்திகேயன் ஆகியோா் கொண்ட குழுவினரால் நடத்தப்பட்ட நோ்காணலில் எழுத்து, நோ்முகத் தோ்வு மூலம் 8 மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அவா்களுக்கான பணி நியமன ஆணை கல்லூரி முதல்வா் ரவீந்திரன், உதவி பேராசிரியா் மகாராஜன் ஆகியோா் முன்னிலையில் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கல்லூரி தாளாளா் விஜயன் வழிகாட்டுதலின்பேரில் கல்லூரியின் வேலை வாய்ப்பு அலுவலரும், உதவி பேராசிரியருமான பிரசாந்த் செய்திருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





