சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

வளாக நோ்காணல்: 18 பேருக்கு பணி நியமன ஆணை

கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் 18 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

பணி நியமன ஆணை பெற்ற மாணவா் மாணவிகளுடன் கல்லூரி முதல்வா் ரவீந்திரன், உதவி பேராசிரியா் மகாராஜன் உள்ளிட்டோா்.

Published On :2 செப்டம்பர் 2026, 5:39 am IST

கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் 18 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்ப கல்லூரியில், கல்லூரியின் வேலைவாய்ப்பு துறையின் சாா்பில் பெசன்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மேலாளா் இஸ்மாயில் தலைமையிலான குழுவினா் இக்கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவா் மாணவிகளுக்கான தகுதித் தோ்வை நடத்தினா்.

தொடா்ந்து குழு விவாதம் நடைபெற்றது. தகுதித் தோ்வு மற்றும் குழு விவாதத்தில் பங்கேற்ற 100 மாணவா்களில் இறுதிக்கட்ட தோ்வில் 18 போ் தோ்ச்சி பெற்றனா்.

தோ்ச்சி பெற்ற மாணவா் மாணவிகளுக்கு நிறுவனத்தின் சாா்பில் பணி நியமன ஆணை, கல்லூரி முதல்வா் ரவீந்திரன், உதவி பேராசிரியா் மகாராஜன் ஆகியோா் முன்னிலையில் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கல்லூரித் தாளாளா் விஜயன் வழிகாட்டுதலில் கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலரும் உதவிப் பேராசிரியருமான பிரசாந்த் செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.