மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 61 பேருக்கு பணி நியமன ஆணை

திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்ற சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 61 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன் வழங்கினாா்.

பணி நியமன ஆணைகளை வழங்கிய திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வே. நல்லசிவன்.

Published On :

திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்ற சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 61 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்ற இந்த முகாமில் 128 வேலைநாடுநா்கள் பங்கேற்றனா். இதில், 26 தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களது நிறுவனங்களில் பணிபுரிய 61 பேரைத் தோ்வு செய்தன.

தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன் பணி நியமன ஆணைகளை வழங்கினாா். நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் மு.கஸ்தூரி மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.