பி.டி. அரசகுமார் மீதான குண்டர் சட்டம் ரத்து! மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடக்கிவைத்தார்!மதுரையில் முதல்வர் விஜய் சாலைவலம்!ஒரு ஓட்டில் தோல்வி: திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் மனு நிராகரிப்பு பெங்களூரு: தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி! ஹரியாணாவில் 250 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி பலி!தங்க மோதிரத்தை விட தரமான பால்தான் குழந்தைகளுக்கு தேவை: தமிழிசை சௌந்தரராஜன் செஸ் ஒலிம்பியாட்: பதக்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஹரியாணாவில் 250 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி பலி! கோவை தனியார் பள்ளியில் தீ விபத்து! விடுமுறையால் தப்பிய மாணவர்கள்!போக்சோ வீரமணி வழக்கு: முதல்வர் விஜய், அமைச்சர்களிடம் விசாரிக்க வேண்டும்! திமுக மனு

தனியார் பள்ளிகளிடம் ரூ. 100 கோடி மோசடி: அன்பில் மகேஸ் மனு செப். 30ல் விசாரணை!

தனியார் பள்ளிகளிடம் ரூ. 100 கோடி மோசடி வழக்கில் அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனு மீது செப். 30ல் விசாரணை...

Madras High Court

சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனுவை புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக, சில மாதங்களுக்கு முன் பதிவு செய்யப்பட்ட சங்கம் ஒன்றின் தலைவர் டி.சி. இளங்கோவன் உள்ளிட்ட பல பள்ளிகளின் நிர்வாகிகள் புகார் அளித்திருந்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ஜூன் 27-ஆம் தேதி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார், முன்னாள் எம்எல்ஏ முத்துகுமார், சுரேஷ், ராஜா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதில் அரசகுமார் கைது செய்யப்பட்ட நிலையில், அன்பில் மகேஸிடம் போலீஸார், செப். 16-ஆம் தேதி, அன்பில் மகேஸின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் உட்பட 9 இடங்களில் சோதனை நடத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சான்றுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதன்பின்னர், அன்பில் மகேஸுக்கு சம்மன் அனுப்பியதன் அடிப்படையில், செப். 18-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜரானார்.

இந்த நிலையில், தனக்கு எதிராக 4 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், அன்பில் மகேஸ் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், வழக்கின் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய விலக்களிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அன்பில் மகேஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன், வழக்கின் முதல் தகவல் அறிக்கை நகல் இல்லாமல், மனுவை விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவுக்கு எண்ணிடும் நடைமுறைகளை முடித்து, வழக்கை புதன்கிழமை விசாரணைக்குப் பட்டியலிடுமாறு பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER