ஐபிஎல் டிரேடிங்! பஞ்சாப் கிங்ஸில் இணைந்தார் ஹார்திக் பாண்டியா! மும்பையில் அர்ஷ்தீப்!
பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஹார்திக் பாண்டியா இணைந்தது பற்றி...

ஹார்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் - Photo: x \ ipl
ஐபிஎல் டிரேடிங் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹார்திக் பாண்டியாவுக்கு பதிலாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா, கடந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸிலிருந்து விலகி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மீண்டும் இணைந்தார். ஹார்திக் பாண்டியாவின் வருகைக்குப் பிறகு மும்பை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டார். அணியை கடந்த மூன்று சீசன்களாக ஹார்திக் பாண்டியாக கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.
இருப்பினும், கடந்த மூன்று சீசன்களும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. கடந்த மூன்று சீசன்களில் மும்பை அணி ஒருமுறை கூட பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை.
இதனிடையே, ஹார்திக் பாண்டியா வேறு அணிக்கு மாறவுள்ளதாகவும் அவரை டிரேடிங் மூலம் பெறுவதற்கு பல அணிகள் போட்டி போட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஹார்திக் பாண்டியா இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஹார்திக் பாண்டியாவுக்கு பதிலாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளார்.
மேலும், மும்பை இந்தியன்ஸில் ரூ. 16.35 கோடி ஊதியத்தில் இருந்த ஹார்திக் பாண்டியா, தற்போது பஞ்சாப் கிங்ஸில் ரூ. 18 கோடிக்கு இணைந்துள்ளார்.
இதேபோல், பஞ்சாப் அணியின் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தனது முந்தைய ஊதியமான ரூ. 18 கோடிக்கே மும்பை இந்தியன்ஸில் இணைந்துள்ளார்.
The trade confirmation you have been waiting for is HERE!
— IndianPremierLeague (@IPL) November 11, 2026
Two marquee #TeamIndia stars, two franchise and a blockbuster trade ð
Hardik Pandya heads to @PunjabKingsIPL and Arshdeep Singh moves to @mipaltan.
ð Hardik will join #PBKS at a revised fee of INR 18 crore, up from⦠pic.twitter.com/LMcYMjnScF
Summary
IPL Trading - Hardik Pandya joins Punjab Kings; Arshdeep moves to Mumbai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

