9.5 சிஜிபிஏ மாணவர்களுக்கு திருப்பதியில் இலவச தரிசனம்! விநோத அறிவிப்பை வெளியிட்ட கல்லூரிபுதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து! 22 பயணிகள் காயம்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை! பண்டிகை நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட முடிவு?ஜம்முவில் காணாமல்போன சிறப்பு காவல் அதிகாரிகள் சடலமாக மீட்பு!நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்!இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!சம்பா நெற்பயிா்க் காப்பீட்டு காலவரம்பு டிச. 1 வரை நீட்டிப்புஉபோ் செயலியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸிகள் இயக்கப்படாது!

9.5 சிஜிபிஏ மாணவர்களுக்கு திருப்பதியில் இலவச தரிசனம்! விநோத அறிவிப்பை வெளியிட்ட கல்லூரி

9.5 சிஜிபிஏ மாணவர்களுக்கு திருப்பதியில் இலவச தரிசனம் செய்யும் வாய்ப்பு என்ற விநோத அறிவிப்பை வெளியிட்ட கல்லூரி பற்றி...

Tirupati Sri Venkateswara Swamy Temple Annual Brahmotsavam Garuda Vahana Seva!

திருப்பதி ஏழுமலையான் கோயில்

Updated On :

தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி, தன்னுடைய மாணவர்களுக்கு ஒரு விநோத சலுகையை அறிவித்து தலைப்புச் செய்தியில் இடம்பிடித்துள்ளது.

அதாவது, கல்லூரியின் இறுதியாண்டில் படிக்கும் மாணவர்களின் சிஜிபிஏ 9.5 ஆக இருந்தால், அவர்களும், அவர்களது பெற்றோர்களும் இலவசமாக திருப்பதி அழைத்துச் செல்லப்பட்டு தரிசனம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு.

தகுதியுடைய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியை 'ஸ்ரீவாரி பிரேக் தரிசனம்' முறையில் தரிசனம் செய்யக் கல்லூரி ஏற்பாடு செய்து தரும்.

அது மட்டுமல்ல, தில்லியிலிருந்து திருப்பதிக்குச் சென்று திரும்புவதற்கு, மூன்று பயணிகளுக்கு ஏசி மூன்றாம் வகுப்புக்கான ரயில் கட்டணத்தையும் கல்லூரியே ஏற்கும் என்பதுதான் ஹைலைட்டே.

மேலும், தகுதியுடைய ஒவ்வொரு மாணவருக்கும் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் 'பிரதிபா விருது' வழங்கப்படும். இந்த விருதில் ஐந்து கிராம் எடையுள்ள வெள்ளி நாணயம், சால்வை, நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் ஆகியவை அடங்கும்.

அக்டோபர் 28 தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் நிர்வாகம் அளித்த அனுமதியைத் தொடர்ந்து, கல்லூரி முதல்வர் வஜலா ரவி மாணவர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையின் மூலம் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ஆந்திர மாநிலத்தில்உள்ள புகழ்பெற்ற திருமலை வெங்கடேஸ்வரர் கோயிலை நிர்வகிக்கும் அதே திருப்பதி திருமலை நிர்வாகத்தால்தான் இந்தக் கல்லூரியும் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டம், 2025-26 கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும்.

Summary

Free Darshan in Tirupati for Students with 9.5 CGPA! College Issues Unusual Announcement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.