சென்னையிலேயே இப்படி ஒரு அசம்பாவிதம்; இது முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறமையின்மை! இபிஎஸ்
சென்னை அம்பத்தூரில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து இளைஞர் பலியானது பற்றி இபிஎஸ் பதிவு...

இபிஎஸ் - ENS
சென்னை அம்பத்தூரில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து இளைஞர் பலியானது குறித்து தவெக அரசை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
"சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே திறந்தவெளியாக விடப்பட்டிருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து, இரும்புக்கம்பி தலையில் செருகி 25 வயதே நிரம்பிய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
எந்தவொரு மழைநீர் வடிகால் அல்லது சாலையோரப் பணிகள் மேற்கொள்ளப்படும்போதும், அங்கே எச்சரிக்கைப் பலகைகள், ஒளிரும் ஸ்டிக்கர்கள் மற்றும் தகுந்த தடுப்புகள் (Barricades) அமைத்து விபத்துகள் ஏற்படாத வண்ணம் பணிகளை மேற்கொள்வது அரசின் முதன்மை கடமையாகும்.
முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகத் துறையின் குளறுபடிகளாலும், முறையான திட்டமிடல் இன்றி அவசர அவசரமாக மேற்கொள்ளப்படும், உள்கட்டமைப்புப் பணிகளாலும், எந்த நடைமுறைகளும் இங்கு பின்பற்றாத காரணத்தினாலும், எதிர்கால கனவுகள் நிரம்பிய ஒரு அப்பாவி இளைஞரின் உயிர் இங்கே பறிபோயிருக்கிறது.
நகராட்சி நிர்வாகத் துறை முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கி வரும் நிலையில், தலைநகர் சென்னையிலேயே இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்திருப்பது என்பது முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறமையின்மையையும் மெத்தனப்போக்கையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு தவெக அரசு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் தமிழகம் முழுவதும் தோண்டப்பட்டு பாதுகாப்பு இன்றி அரைகுறையாகக் கிடக்கும் அனைத்து வடிகால் பணிகளையும் உடனடியாக சீரமைத்து பாதுகாப்பு தடுப்புகளை அமைக்க வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
à®à¯à®©à¯à®©à¯ à®à®®à¯à®ªà®¤à¯à®¤à¯à®°à¯ தà¯à®´à®¿à®±à¯à®ªà¯à®à¯à®à¯ à®à®°à¯à®à¯ திறநà¯à®¤à®µà¯à®³à®¿à®¯à®¾à® விà®à®ªà¯à®ªà®à¯à®à®¿à®°à¯à®¨à¯à®¤ மழà¯à®¨à¯à®°à¯ வà®à®¿à®à®¾à®²à¯ பளà¯à®³à®¤à¯à®¤à®¿à®²à¯ தவறி விழà¯à®¨à¯à®¤à¯, à®à®°à¯à®®à¯à®ªà¯à®à¯à®à®®à¯à®ªà®¿ தலà¯à®¯à®¿à®²à¯ à®à¯à®°à¯à®à®¿ 25 வயத௠நிரமà¯à®ªà®¿à®¯ à®à®³à¯à®à®°à¯ பரிதாபமா஠à®à®¯à®¿à®°à®¿à®´à®¨à¯à®¤à®¤à®¾à® வரà¯à®®à¯ à®à¯à®¯à¯à®¤à®¿ à®à®¤à®¿à®°à¯à®à¯à®à®¿à®¯à®³à®¿à®à¯à®à®¿à®±à®¤à¯.
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) November 12, 2026
à®à®¨à¯à®¤à®µà¯à®°à¯ மழà¯à®¨à¯à®°à¯ வà®à®¿à®à®¾à®²à¯ à®à®²à¯à®²à®¤à¯ à®à®¾à®²à¯à®¯à¯à®°à®ªà¯ பணிà®à®³à¯â¦
Summary
EPS posts on youth death after he fell into a rainwater drainage trench in Chennai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

