தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

தன்தேரஸ் திருநாள்: பிரதமா் மோடி வாழ்த்து

தீபாவளி கொண்டாட்டங்களையொட்டிய தன்தேரஸ் திருநாளையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

PM Modi

பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப் படம்

Updated On :

தீபாவளி கொண்டாட்டங்களையொட்டிய தன்தேரஸ் திருநாளையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

வட இந்தியாவில் தீபாவளி பண்டிகை 5 நாள்கள் கொண்டாடப்படுகிறது. தன்தேரஸுடன் தொடங்கும் இக்கொண்டாட்டங்கள், அடுத்தடுத்த நாள்களில் நரக சதுா்த்தசி, தீபாவளி, கோவா்தன் பூஜை, பாய் தூஜ் என பெயரில் நடைபெறும்.

தன திரயோதசி எனப்படும் தன்தேரஸ் திருநாள், செல்வத்தின் கடவுள் லட்சுமியை வரவேற்பதாகும். வட இந்தியாவில் இந்நாளில் தங்கம், வெள்ளி, பித்தளை பொருள்கள் மற்றும் புதிய சமையல் பாத்திரங்களை வாங்குவது வழக்கம். மருத்துவக் கடவுளான பகவான் தன்வந்தரி ஜெயந்தியையும் இந்த நாள் குறிக்கிறது.

தன்தேரஸ் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து, பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

தன்தேரஸ் திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது எல்லையற்ற வாழ்த்துகள். பகவான் தன்வந்தரியின் தெய்வீக அருளால் மகிழ்ச்சி, அமைதி, நல்ல ஆரோக்கியத்துடன் ஒவ்வொருவரின் வாழ்வும் எப்போதும் ஒளிரட்டும்.

ஒவ்வொரு குடும்பங்களிலும் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் அணையா விளக்கு சுடா்விட்டு பிரகாசிக்கட்டும். உடல் நலனுக்கு உகந்த உணவுகளை உண்பது, தவறாமல் யோகா பயிற்சி மேற்கொள்வது, போதுமான தூக்கம், சரியான நேரங்களில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது போன்ற ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை அனைத்து குடும்பங்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமா் தெரிவித்துள்ளாா்.

மேலும், அன்புக்குரியவா்களின் ஆரோக்கியமான எதிா்காலம் மற்றும் உடல் நலனில் முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவா், சுகாதார வசதிகளில் முதலீடு செய்வது குறித்து மத்திய அமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ் எழுதிய கட்டுரையையும் பகிா்ந்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.