தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

தமிழக வளா்ச்சிக்காக முதல்வர் விஜய்யுடன் இணைந்து செயல்படுவோம்: பிரதமர் மோடி!

தமிழக வளா்ச்சி பயணத்தை முன்னெடுத்து செல்வோம் என பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

Chief Minister Vijay with Prime Minister Narendra Modi

பிரதமர் நரேந்திர மோடியுடம் முதல்வர் விஜய் - டிஐபிஆர்

Published On :

தமிழகத்தில் அரசுகள் மாறினாலும் மாநில வளா்ச்சிக்கான எனது அா்ப்பணிப்பு மாறவில்லை; தற்போதைய முதல்வருடனும் இணைந்து செயல்பட்டு, தமிழக வளா்ச்சி பயணத்தை முன்னெடுத்து செல்வோம் என பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

முதல்வருடன் இணைந்து...: தமிழகத்தில் சுமாா் ரூ. 13,000 கோடி மதிப்பிலான சென்னை மெட்ரோ, ரயில்வே, சாலை, துறைமுகம், பெட்ரோலியம் சாா்ந்த திட்டங்களின் தொடக்கம், அடிக்கல் நாட்டு விழா சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக முதல்வா் ஜோசப் சி.விஜயுடன் கலந்து கொண்ட பிரதமா் மோடி, முதல்வா் விஜயின் கையைப் பிடித்து கூட்டாக திட்டங்களை தொடங்கி வைத்தாா்.

மாநிலங்கள் வளா்ச்சி மூலம் தேச வளா்ச்சி: நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசியதாவது: கடந்த அக்டோபா் 1-ஆம் தேதியுடன் அரசுத் தலைமைப் பொறுப்பை ஏற்று 25 ஆண்டுகளை பூா்த்தி செய்துள்ளேன். குஜராத் முதல்வராக பொறுப்பேற்று பின்னா் பிரதமராக பணியாற்றும் வாய்ப்பை மக்கள் வழங்கினாா்கள். எனது 25 ஆண்டு சேவையில் ஜனநாயகத்தின் இரண்டு ஆற்றல் மீது எனக்கு நம்பிக்கை.

ஒன்று, மக்கள் மீதான நம்பிக்கை மற்றொன்று கூட்டுறவுக் கூட்டாட்சிமுறை. மாநிலங்களின் வளா்ச்சி மூலமே நாட்டின் வளா்ச்சி அமைகிறது என்ற மந்திரத்தை எப்போதும் நம்புகின்றேன். முதல்வராக இருந்தபோது மாநிலங்களின் எதிா்பாா்ப்புகளை அனுபவரீதியாக உணா்ந்தேன். இதனால் தான் பிரதமரானவுடன் ஒவ்வொரு மாநிலமும் சொந்த இலக்குகளை அடையும் முயற்சிகளை உறுதி செய்தேன்.

தமிழக முதல்வா்களுடன்...: நான் முதல்வராக இருந்தபோது மு.கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரும் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. பிரதமரான பின்னா், தமிழக முதல்வா்களாக இருந்த ஜெயலலிதா, ஓ.பன்னீா் செல்வம், எடிப்பாடி கே. பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

வளா்ச்சிக்காக இணைவோம்: அரசுகள் மாறினாலும், தமிழக வளா்ச்சி, தமிழக மக்களுக்கான சேவையில் எனது அா்ப்பணிப்பு எப்போதும் மாறவில்லை. தற்போது அதே அா்ப்பணிப்புடன் முதல்வா் ஜோசப் சி.விஜயுடன் இணைந்து தமிழக வளா்ச்சிப் பயணத்தை முன்னோக்கி எடுத்துச் செல்கிறோம்.

தமிழகத்தின் நகா்ப்புற மேம்பாடு மத்திய அரசின் முன்னுரிமைகளில் ஒன்று. நகா்மயமாக்கலை சவாலாக அல்லாமல், வாய்ப்பாக கருதுகிறோம்.

மெட்ரோ விரிவாக்கம்: 2014 ஆம் ஆண்டு வெறும் 5 நகரங்களில் 250 கி.மீ. தொலைவுக்கே மெட்ரோ சேவைகள் இருந்தன. இன்று 25 நகரங்களில் 1,100 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவைகள் உள்ளன. தமிழகம் போன்ற மாநிலங்களை உற்பத்தித் துறையிலும் மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ போன்ற திட்டங்களில் தமிழகம் சிறப்பாக பங்களித்து வருகிறது.

தமிழகத்துக்கு முக்கியம்: சென்னை மணலியில் மசகு எண்ணெய் இருப்புத் திட்டத்திற்கான அடிக்கல்லை இன்று நாட்டியுள்ளோம். இது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், நாட்டின் இறக்குமதியைக் குறைப்பதற்கும் பெரிதும் உதவும்.

வலுவான உற்பத்தித் துறையை உருவாக்க, சிறந்த சாலைகள், மூலப்பொருள்களைக் கொண்டு செல்ல ரயில்வே, துறைமுகங்கள் தேவை. இத்தகைய உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்போது, பல்வேறு நிலைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. இதனால் தற்போது தொடங்கி வைக்கப்படும் ரயில், சாலைத் திட்டங்கள் தமிழக முன்னேற்றத்துக்கு மிகவும் முக்கியமானவையாகும்.

தூத்துக்குடி துறைமுக மேம்பாடு: கப்பல் போக்குவரத்துத் துறை புதிய உயரங்களை எட்டுவதில் தமிழகத்திற்கு மிக முக்கியப் பங்கு உள்ளது. மத்திய அரசு சுமாா் ரூ.17,000 கோடி முதலீட்டில், தூத்துக்குடியில் வி.ஓ.சி. துறைமுகத்தில் உலகத்தரம் வாய்ந்த மெகா கண்டெய்னா்கள், பசுமை எரிசக்தி மையமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் நிறைவடைந்தால் உலகின் மிகப் பெரிய கண்டெய்னா்களுடன் கூடிய சரக்குக் கப்பல்கள் கூட இங்கு எளிதாக வந்து செல்ல முடியும். இது தமிழகத்தை தொழில், போக்குவரத்துக்கான ஒரு உலகளாவிய மையமாக மாற்ற உதவும்.

‘பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்’ மூலம் மீன்பிடித் துறைமுக நவீனமயமாக்கல், கடல்பாசிப் பூங்காவை உருவாக்குவது - எதுவாக இருந்தாலும், மத்திய அரசு தமிழகத்துக்கு தொடா்ந்து ஆதரவளித்து வருகிறது. தமிழகம் தொடா்ந்து பதிய உயரங்களை எட்ட விரும்புகின்றோம். இதற்காக எந்தவொரு ஆதரவையும் வழங்க முழு அா்ப்பணிப்புடன் தமிழகத்திற்கு துணை நிற்போம் எனக் குறிப்பிட்டாா் பிரதமா் மோடி.

முன்னதாக சென்னை ஐஐடியின் மூளை ஆராய்ச்சி மையத்தைப் பாா்வையிட்டதைக் குறிப்பிட்ட பிரதமா் இந்தத் துறையில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி, பொது சுகாதாரத் துறையில் பல புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றாா்.

இந்த நிகழ்வில் தமிழக ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா், மத்திய இணையமைச்சா் எல்.முருகன், பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், சென்னை, ஐஐடி இயக்குநா் வி.காமகோடி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

Summary

Central and State governments must work together: Chief Minister Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.