தூணில் தீபம் ஏற்றுவது என் வேலையல்ல? மதுரை ஆட்சியர் தரப்பு வாதம்!திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை செயல்படுத்தினீர்களா? உச்ச நீதிமன்றம் கேள்விதொகுதி மறுவரையறை நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை! மு.க. ஸ்டாலின்அரசியலுக்கு வருகிறாரா? நடிகை த்ரிஷா சென்ற சிருங்கேரி சாரதா கோயிலில் என்ன விசேஷம்?121 கிலோ! திருப்பதி காணிக்கையில் வரலாறு படைத்த சென்னை தம்பதி யார்? என்னென்ன ஆபரணங்கள்? படங்கள்!அம்பாசமுத்திரம், பெருந்துறை இடைத்தேர்தலுக்கான தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!டெல்டா மாவட்டங்களில் பயிர் சாகுபடி பாதிப்பு: முதல்வர் விஜய் ஆலோசனை! ஆவடி மாநகராட்சி மக்களின் கவனத்துக்கு... புகார்கள் தெரிவிக்க மொபைல் செயலி!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (நவ. 27)பறவைகள் உயிரிழப்பு: சென்னை கிண்டி பூங்கா நவ. 30 வரை மூடல்!பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் மனு தள்ளுபடி!

தூணில் தீபம் ஏற்றுவது என் வேலையல்ல? மதுரை ஆட்சியர் தரப்பு வாதம்!

தூணில் தீபம் ஏற்றுவது என் வேலையல்ல, சபரிமலை வழக்கில் உத்தரவு நிறைவேற்றப்பட்டதா? என்று மதுரை ஆட்சியர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை

திருப்பரங்குன்றம் தூண் - from video grab

Updated On :

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் உத்தரவை நிறைவேற்றுவது ஆட்சியருடைய பொறுப்பு என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டிய நிலையில், சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டதா என்று மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பு வழக்குரைஞர் கேள்வி எழுப்பினார்.

மேலும், கோயில் விவகாரத்தில் அனைத்தையும் நிர்வாக ரீதியாக செயல்படுத்திவிட முடியாது என்றும் மாவட்ட ஆட்சியர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதிட்டார்.

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாத விவகாரம் தொடா்பான நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் மற்றும் பிற மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமாா் மற்றும் விபுல் பஞ்சோலி அடங்கிய அமா்வு முன் இன்று விசாரணை நடைபெற்றபோது, தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பறிப்பித்த உத்தரவை நிறைவேற்றுவது ஆட்சியருடைய பொறுப்பு என்று சுட்டிக்காட்டினர்.

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை எனக் கூறுவது அரசமைப்பின் சீர்குலைவு என்ற நிலையை ஏற்படுத்திவிடாதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு கோயில் விஷயத்தில் அனைத்தையும் நிர்வாக ரீதியாக செயல்படுத்த முடியாது. சபரிமலையில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டதா? என மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கேள்வி எழுப்பினார்.

தூணில் தீபம் ஏற்றுவது ஏன் வேலையல்ல, எனது அதிகாரமும் அதற்குள் செல்லாது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றுவேன் என்று நீதிமன்றத்தில், கூறப்பட்டது, ஆனால், உரிய தூணில் தீபம் ஏற்றுவேன் என்று சொல்லவில்லை என்றும் ஆட்சிர் தரப்பில் கூறப்பட்டது.

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த நடத்தப்பட்ட கூட்டங்கள் முடிவுகள் அனைத்தும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். பிரச்னை செய்ய முயன்ற 300க்கும் குறைவானோர்தான் கைது செய்யப்பட்டனர் என்றார் வழக்குரைஞர்.

சட்டம் - ஒழுங்கு விவகாரர்தில் எந்தப் பிரச்னையும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனத்துடன் இருந்தோம் என்று மதுரை காவல்துறை ஆணையர் தரப்பில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Has the order in the Sabarimala case been implemented? Query raised by the Madurai District Collector’s side

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.