திருப்பரங்குன்றம் தீபம்! தமிழக அரசு மீது நடவடிக்கை கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத தமிழக அரசு மீது நடவடிக்கை கோரி முறையீடு...

உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதனை நிறைவேற்றாத தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் முறையிட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமாா் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அடங்கிய அமர்வு, இடைக்கால உத்தரவாக, இந்தாண்டு மட்டும் கார்த்திகை தீப நாளன்று தீபத் தூணில் விளக்கேற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
மேலும், மதுரை மாவட்ட ஆட்சியா், ஏற்பாடுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பாா்வைக்கான ஒருங்கிணைப்பு அலுவலராகச் செயல்படுவாா் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கார்த்திகை தீப நாளான நேற்று, திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோவில் அருகேவுள்ள தீபத்தூணில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது.
உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமாா் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அடங்கிய அமர்வு முன்பு, மனுதாரரான ராம ரவிக்குமார் தரப்பில், மாவட்ட ஆட்சியர், கோயில் ஆணையர் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு கோரி முறையிடப்பட்டது.
அப்போது, கடைசி வரை தூணில் தீபமேற்றப்படும் எனக் கூறிய தமிழக அரசு, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, தீபத்தை ஏற்றாமல் ஏமாற்றிவிட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற முடியவில்லை என்று விளக்கமான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மனுதாரர் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டால், அதனை பரிசீலனை செய்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
Summary
Tirupparankundram Deepam - Appeal filed in the Supreme Court seeking action against the Tamil Nadu government
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


