கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ராஜிநாமா செய்ய முடிவு?
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ராஜிநாமா செய்யவுள்ளதாக தகவல்...
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் - கோப்புப் படம்
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெண் மாவட்ட ஆட்சியருக்கு, கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஆா். திரிசூலி என்பவா் ரிட் மனு தாக்கல் செய்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யிடம் பெண் மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை புகார் அளித்தார்.
தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விசாரணை அதிகாரியாக திருப்பூர் மாவட்ட எஸ்.பி. ஸ்ருஷ்டி சிங் நியமிக்கப்பட்டார்.
இதனிடையே, அருள் விக்னேஷ் மீது ஜாமீனில் வெளிவர முடியாத 3 பிரிவுகள் மற்றும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரிடம் முதல்கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்.பி. இ.ஷாநாஸ், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, கோட்டாட்சியா் சி.முருகன், டிஎஸ்பி எம்.கலையரசன் ஆகியோா் வழக்கு விசாரணை குறித்து ஆலோசனை நடத்தினா்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்வதற்கான பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு முன்னதாக, சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகருக்கு மின்னஞ்சல் மூலம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்து அருள் விக்னேஷ் கடிதம் அனுப்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், அவர் தவெகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Has Kallakurichi MLA Arul Vignesh decided to resign?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


