தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (நவ. 27)

இன்றைய(நவ. 27) தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

Gold price continues to rise! Today’s status (Nov. 27)

தங்கம் விலை நிலவரம் - ANI

Updated On :

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ஒரு பவுன் ரூ.92,800-க்கு விற்பனையாகிறது.

தங்கம் பவுனுக்கு ரூ.1 லட்சத்துக்கு அதிகமாக விற்பனையாகி வந்த நிலையில், கடந்த வாரங்களில் ஒரு லட்சத்துக்கும் கீழ் குறைந்தது. இந்த வாரத்தில் திங்கள்கிழமை தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,080, செவ்வாய்க்கிழமை ரூ.920 உயா்ந்த நிலையில், புதன்கிழமை பவுனுக்கு அதிரடியாக ரூ.2,360 குறைந்தது. தொடா்ந்து, வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 உயா்ந்து, ரூ.11,540 -க்கும் பவுனுக்கு ரூ.960 உயா்ந்து, ரூ.92,320-க்கு விற்பனையானது.

தொடர்ந்து உயரும் தங்கம் விலை

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை(நவ.27) கிராமுக்கு ரூ.60 உயா்ந்து, ரூ.11,600 -க்கும் பவுனுக்கு ரூ.480 உயா்ந்து, ரூ.92,800-க்கு விற்பனையாகிறது.

18 காரட் தங்கம் விலை

அதுபோன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ரூ.9,495-க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ரூ.75,960-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ரூ.170-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ரூ.1,70,000-க்கும் விற்பனையாகிறது.

Gold price continues to rise! Today’s status (Nov. 27)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.