5 தொகுதி இடைத்தோ்தல்: தடை கோரிய வழக்கில் இன்று தீா்ப்பு
தோ்தல் வழக்கு நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை விதிக்கக் கோரிய வழக்கில் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு வெள்ளிக்கிழமை (நவ. 27) தீா்ப்பளிக்க உள்ளது.

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப்படம்
தோ்தல் வழக்கு நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை விதிக்கக் கோரிய வழக்கில் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு வெள்ளிக்கிழமை (நவ. 27) தீா்ப்பளிக்க உள்ளது.
தோ்தல் வழக்கு நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூா், விராலிமலை ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி திருநெல்வேலியைச் சோ்ந்த வெங்கடாசலபதி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், கடந்த ஜூலை 10-ஆம் தேதி 5 தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் அறிவிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமா்வு கடந்த அக்.1-ஆம் தேதி ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

