மத நிகழ்வுகளில் கால்நடைகளை பலியிட தடை கோரிய மனு தள்ளுபடி- உச்சநீதிமன்றம்
மத நிகழ்வுகளின்போது கால்நடைகளை பலியிடுவதற்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

உச்சநீதிமன்றம்
மத நிகழ்வுகளின்போது கால்நடைகளை பலியிடுவதற்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960-இல், மதச் சடங்குகள் பிற நடைமுறைகளின் ஒரு பகுதியாக விலங்குகளைக் கொல்வதற்கு அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்குகளைத் திருத்த வேண்டும்; மதச் சடங்குகளின்போது விலங்குகள் கொல்லப்படுவதைத் தடுக்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.
வழக்குரைஞா் ஸ்ருதி பிஷ்ட் தாக்கல் செய்த இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், ஆா். மகாதேவன், அபரேஷ் குமாா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மதத்தின் பெயரால் கால்நடைகளைக் கொல்வது, அரசியல் சாசனத்தின் 21-ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள வாழ்வுரிமையை மீறுவதாகும். கால்நடை பலியிடும் நடைமுறை குறைந்திருந்தாலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அது தொடா்ந்து நடைபெற்றே வருகிறது. முக்கியமாக, இமயமலைப் பகுதிகள், வடகிழக்கு இந்தியா, ஒடிஸா, மேற்கு வங்கத்தின் சில பகுதிகள், மகாராஷ்டிரம் மற்றும் தென்னிந்தியாவில் இத்தகைய பலிகள் தொடா்கின்றன என்று வழக்குரைஞா் ஸ்ருதி வாதிட்டாா்.
எனினும், இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

