நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 93.44 ஆக நிறைவு!ஃபெட் வட்டி விகித உயர்வு அச்சம் எதிரொலி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிவு!ரயில் பயணத்தில் உணவு ஆர்டர் செய்பவரா? இந்த 14 தளங்களை தவிர்த்திடுங்கள்! ஐஆர்சிடிசி அறிவுரைசோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!முதல்வர் விஜய் எதைப் பற்றி பேசியிருக்கிறார்? புதிதாகக் கேட்பதற்கு! காவிரி குறித்து ஸ்டாலின் பதில்தேனி சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்கே தெரியாமல் திறந்த தவெகவினரால் பரபரப்பு!ராகுலின் தொலைபேசி அழைப்பு! மு.க. ஸ்டாலின் விளக்கம்கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு எப்படியிருக்கிறார்? தகவல் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு!திருவண்ணாமலை கார்த்திகை தீபம்! இலவச தரிசன டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!என்கவுன்டர் செய்யப்பட்ட லஷ்கர் பயங்கரவாதி லத்தீஃப் பட் யார்? அதிரவைக்கும் பின்னணிவேலைகளில் மட்டுமல்ல... தேர்வுகளிலும் மூக்கை நுழைக்கும் ஏஐ! ஸ்மார்ட் கண்ணாடி மூலம் மோசடி!தமிழ்நாட்டில் நாளை கனமழை பெய்யாது! மஞ்சள் எச்சரிக்கை வாபஸ்!அரக்கோணம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட நலத் திட்டங்களைத் தொடக்கி வைத்தார் முதல்வர் விஜய்பொங்கல் ரிடர்ன்! முடிந்தது ரயில் டிக்கெட் முன்பதிவு!உலக பாரம்பரிய வாரம்: மாமல்லபுரத்தில் நாளை (நவ. 19) இலவச அனுமதி!ஜம்மு - காஷ்மீர் மசூதிக்குள் பதுங்கியிருந்த லஷ்கர்-இ-தொய்பா தளபதி என்கவுன்டர்!வ.உ.சி.யின் கொள்கைகளைப் பின்பற்றி முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்! முதல்வர் விஜய்!செம்மஞ்சேரியில் ஒலிம்பிக் சிட்டி அமைக்க டெண்டர் வெளியீடு!தீவிரப் புயலாக வலுப்பெற்றது அக்வான்!ஜம்மு-காஷ்மீரில் மோதல்! லஷ்கர்-இ-தொய்பா தளபதியை சுற்றிவளைத்த இந்திய ராணுவம்!தமிழக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடருக்கு வாய்ப்பில்லை? ஆற்று மணல் முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்பட 27 போ் பெயா்கள் வெளியீடு எஸ்ஐஆருக்கு எதிரான வழக்குகள்: டிச. 9-இல் உச்சநீதிமன்றம் விசாரணை பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்

நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? என்பது குறித்த உண்மை நிலவரம் பற்றி..

காய்ச்சல் பாதிப்பு

காய்ச்சல் பாதிப்பு - சித்திரிப்பு

Updated On :

நெல்லை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பு குறைந்திருக்கிறது, 9 பேர் மட்டுமே உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர், 2 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது காய்ச்சல் பாதிப்பால் 9 பேர் மட்டுமே உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற விளக்கம் கிடைத்துள்ளது.

இதுகுறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் செல்வராஜன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை 9 பேர் மட்டுமே உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேருக்கு மட்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், மருத்துவமனையின் பொது மருத்துவத் துறைத் தலைவர் மருத்துவர் ரத்தினகுமார் பேசுகையில், காய்ச்சல் பாதிப்புடன் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில், பொது மருத்துவத் துறை சார்பில் 30 படுக்கைகள் கொண்ட தனி காய்ச்சல் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வரும் அனைவருக்கும் ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நோயாளிகளின் உடல்நிலைக்கு ஏற்ப உப்பு கரைசல் (IV Fluids) மற்றும் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் உடனடியாக வழங்கப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காய்ச்சல் பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, நோயாளிகளுக்குத் தேவையான சிகிச்சைகளைத் தாமதமின்றி வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பால் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாகவும், எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு காய்ச்சல் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் மருத்துவர் ரத்தினகுமார் தெரிவித்தார்.

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு குறித்த கவலைகள் நிலவி வரும் சூழலில், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகளே உள்நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது.

Summary

Is the incidence of fever on the rise in Nellai? What is the actual situation?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.