தேனி சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்கே தெரியாமல் திறந்த தவெகவினரால் பரபரப்பு!ராகுலின் தொலைபேசி அழைப்பு! மு.க. ஸ்டாலின் விளக்கம்கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு எப்படியிருக்கிறார்? தகவல் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு!திருவண்ணாமலை கார்த்திகை தீபம்! இலவச தரிசன டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!என்கவுன்டர் செய்யப்பட்ட லஷ்கர் பயங்கரவாதி லத்தீஃப் பட் யார்? அதிரவைக்கும் பின்னணிவேலைகளில் மட்டுமல்ல... தேர்வுகளிலும் மூக்கை நுழைக்கும் ஏஐ! ஸ்மார்ட் கண்ணாடி மூலம் மோசடி!தமிழ்நாட்டில் நாளை கனமழை பெய்யாது! மஞ்சள் எச்சரிக்கை வாபஸ்!அரக்கோணம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட நலத் திட்டங்களைத் தொடக்கி வைத்தார் முதல்வர் விஜய்பொங்கல் ரிடர்ன்! முடிந்தது ரயில் டிக்கெட் முன்பதிவு!உலக பாரம்பரிய வாரம்: மாமல்லபுரத்தில் நாளை (நவ. 19) இலவச அனுமதி!ஜம்மு - காஷ்மீர் மசூதிக்குள் பதுங்கியிருந்த லஷ்கர்-இ-தொய்பா தளபதி என்கவுன்டர்!வ.உ.சி.யின் கொள்கைகளைப் பின்பற்றி முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்! முதல்வர் விஜய்!செம்மஞ்சேரியில் ஒலிம்பிக் சிட்டி அமைக்க டெண்டர் வெளியீடு!தீவிரப் புயலாக வலுப்பெற்றது அக்வான்!ஜம்மு-காஷ்மீரில் மோதல்! லஷ்கர்-இ-தொய்பா தளபதியை சுற்றிவளைத்த இந்திய ராணுவம்!தமிழக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடருக்கு வாய்ப்பில்லை? ஆற்று மணல் முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்பட 27 போ் பெயா்கள் வெளியீடு எஸ்ஐஆருக்கு எதிரான வழக்குகள்: டிச. 9-இல் உச்சநீதிமன்றம் விசாரணை பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்

தேனி சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்கே தெரியாமல் திறந்த தவெகவினரால் பரபரப்பு!

தேனி சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்கு தெரியாமல் திறந்த தவெகவினரைப் பற்றி...

சோத்துப்பாறை அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட்ட தவெகவினர்.

Updated On :

தேனி சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்கு தெரியாமல் தவெகவைச் சேர்ந்த சிலர் திறந்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை உள்ளது. 126.28 அடி கொண்ட இந்த அணை தேன்கரை, தாமரைக்குளம், கைலாசபட்டி, லட்சுமிபுரம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் உள்ளிட்ட கிராமங்களின் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனத்துக்காவும் பெரியகுளம் நகரத்தின் முக்கியக் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

சோத்துப்பாறையை அணையின் நீர்ப்பாசனத்திலிருந்து தேனி மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 2900 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பயன்படுகின்றன.

மாநிலத்தில் பட்டியலிடப்பட்ட அணைகளின் கீழ் உள்ள சோத்துப்பாறை அணை வழக்கமாக மாநில அரசின் உத்தரவுப்படி திறக்கப்படுவதே நடைமுறையாகும். அந்த நடைமுறையின்படி, அணையிலிருந்து அமைச்சர் அல்லது மாவட்ட ஆட்சியர் தண்ணீரைத் திறந்து வைப்பர்.

அக்டோபர் மாதத்தில் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால், அணையில் போதிய மழை மற்றும் நீர்வரத்து இல்லாததால் விவசாயத்துக்குத் தண்ணீர் திறக்கப்படவில்லை. இவ்வாறான சூழலில் வடகிழக்குப் பருவமழையால் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.

புதிய ஆயக்கட்டுப் பகுதிகளுக்கு நீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் இருந்த நிலையில், நேற்று காலை எந்தவொரு அரசு அதிகாரிக்கும் தெரியாமல், தவெக நிர்வாகிகள் சிலர் பெரியகுளம் சோத்துப்பாறை அணையில் இருந்து 1000 ஏக்கர் விவசாய பாசனத்திற்காக ஆயக்கட்டு புது வாய்க்காலிலிருந்து தண்ணீரைத் திறந்து விட்டுள்ளனர்.

அதன்பின்னர், பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சபரி ஐங்கரன் வழிகாட்டுதலின்படி, தேனி வடகிழக்கு மாவட்ட இணை செயலர் ஷேக் அலி தலைமையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக விடியோவாகப் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் அதனை ரீல்ஸாகவும் பதிவிட்டுள்ளனர்.

அரசு அதிகாரிகளுக்கு முறைப்படி தெரிவிக்காமல், ஆளுங்கட்சியைச் சேர்ந்த தவெகவினர் அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் தவெகவினரே அணையைத் திறந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். நீரை திறந்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்ட காட்சிகளைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடும், பொதுமக்களின் பாதுகாப்போடும் நேரடியாகத் தொடர்புடைய சோத்துப்பாறை அணையை, நீர்வளத்துறை அதிகாரிகளின் உத்தரவின்றித் தவெக நிர்வாகிகளே திறந்த நிலையில், இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு எதிர்க்கட்சியினர் கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

Summary

An incident in which some individuals associated with TVK opened the Sothupparai Dam in Theni—without the knowledge of the authorities—has caused a stir.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER