உருவானது முரசு புயல்! வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!தமிழ்நாடு நாள் ஜூலை 18 மட்டுமே! வரலாற்றை மாற்ற வேண்டாம்: திமுக ஞானேஷ் குமார் பதவி நீக்கம்: தில்லியில் இந்தியா கூட்டணி பேரணி!ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் கைது!வணிக சிலிண்டர் விலை உயர்வு!இந்தியா கூட்டணியின் பேரணி மாபெரும் வெற்றி பெற வேண்டும்: டி.கே. சிவகுமார்

தேனி: ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து...

பலியான சிறுவர்கள் - படம் - தினமணி

Updated On :

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஆற்றில் குளித்த 7-ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் ஞாயிற்றுக்கிழமை (நவ. 1) நீரில் மூழ்கி பலியாகினர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள மேல்மங்கலம் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் மகன் மிதுன் சத்யா (14) மற்றும் முத்தையா என்பவரின் மகன் பாலு தர்ஷன் (14) ஆகிய இரு சிறுவர்களும் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தனர்.

​இன்று வார விடுமுறை தினம் என்பதால், சிறுவர்கள் இருவரும் தங்களது நண்பர்களுடன் மேல்மங்கலம் காவல் நிலையத்திற்கு பின்புறம் உள்ள கருங்கல் என்று பகுதியில் உள்ள வராக நதி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்ற மிதுன் சத்யா மற்றும் பாலு தர்ஷன் ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கியுள்ளனர்.

​இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள், உடனடியாக சத்தமிட்டு அருகிலிருந்தவர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அருகில் உள்ள தோட்டங்களில் பணியில் இருந்த விவசாயிகள் விரைந்து வந்து, ஆற்றுக்குள் மூழ்கிய இரண்டு சிறுவர்களையும் மீட்டனர்.

​உடனடியாக பெற்றோர் மற்றும் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நீரில் மூழ்கி, மீட்கப்பட்ட இரு சிறுவர்களும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிறுவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

​இதைத் தொடர்ந்து, சிறுவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காகத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து மேல்மங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

​விடுமுறை நாளில் ஆற்றில் குளிக்கச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த இச்சம்பவம், மேல்மங்கலம் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Summary

Two 7th-grade students drowned and died on Sunday (Nov. 1) while bathing in a river near Periyakulam in Theni district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.