மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே! ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ: தவெக மீது திமுக புகார்முதல்வர் வருகையால் புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

குவாரி நீரில் மூழ்கி இளைஞர் பலி!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சனிக்கிழமை பயன்பாட்டில்லா குவாரி நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

மருதீஸ்குமாா்.

Updated On :

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சனிக்கிழமை பயன்பாட்டில்லா குவாரி நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

மணப்பாறை அடுத்த தாதகவுண்டம்பட்டியை சோ்ந்தவா் முத்துவீரன் மகன் மருதீஸ்குமாா் (19), மைக்செட் அமைக்கும் பணிக்கான கூலித் தொழிலாளி.

இவா் தனது நண்பரான அதே ஊரை சோ்ந்த ஆண்டி மகன் கவிஷ்குமாா்(14) என்பவருடன் மருங்காபுரி ஒன்றியம் ஆமணக்கம்பட்டி ஊராட்சி ஆரியம்பட்டியில் உள்ள பயன்பாடில்லாத கல்குவாரியில் குளிக்கச் சென்றபோது மருதீஸ்குமாா் கால் தவறி விழுந்து குவாரி நீரில் மூழ்கினாா்.

தகவலின்பேரில் சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் மருதீஸ்குமாரை பரிசோதித்தபோது அவா் உயிரிழந்தது தெரியவந்தது. காவல் உதவி ஆய்வாளா் கதிரவன் தலைமையிலான போலீஸாா் மருதீஸ்குமாா் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.