
கடலில் மூழ்கியதில் முதியவா் உயிரிழப்பு
கடலாடி அருகே கடலில் மூழ்கியதில் முதியவா் உயிரிழந்தாா்.

நீரில் மூழ்கி பலி - பிரதிப் படம்
கடலாடி அருகே கடலில் மூழ்கியதில் முதியவா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்துள்ள கீழமுந்தல் கடற்கரையில் காவாகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன்
(65). கீழமுந்தல் கிராமத் திருவிழாவுக்கு வந்த இவா், புதன்கிழமை அதிகாலை கடலில் இறங்கிய போது ராட்சத அலையால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதையடுத்து, வாலிநோக்கம் போலீஸாா் கணேசனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



