ராகுலின் தொலைபேசி அழைப்பு! மு.க. ஸ்டாலின் விளக்கம்கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு எப்படியிருக்கிறார்? தகவல் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு!திருவண்ணாமலை கார்த்திகை தீபம்! இலவச தரிசன டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!என்கவுன்டர் செய்யப்பட்ட லஷ்கர் பயங்கரவாதி லத்தீஃப் பட் யார்? அதிரவைக்கும் பின்னணிவேலைகளில் மட்டுமல்ல... தேர்வுகளிலும் மூக்கை நுழைக்கும் ஏஐ! ஸ்மார்ட் கண்ணாடி மூலம் மோசடி!தமிழ்நாட்டில் நாளை கனமழை பெய்யாது! மஞ்சள் எச்சரிக்கை வாபஸ்!அரக்கோணம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட நலத் திட்டங்களைத் தொடக்கி வைத்தார் முதல்வர் விஜய்பொங்கல் ரிடர்ன்! முடிந்தது ரயில் டிக்கெட் முன்பதிவு!உலக பாரம்பரிய வாரம்: மாமல்லபுரத்தில் நாளை (நவ. 19) இலவச அனுமதி!ஜம்மு - காஷ்மீர் மசூதிக்குள் பதுங்கியிருந்த லஷ்கர்-இ-தொய்பா தளபதி என்கவுன்டர்!வ.உ.சி.யின் கொள்கைகளைப் பின்பற்றி முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்! முதல்வர் விஜய்!செம்மஞ்சேரியில் ஒலிம்பிக் சிட்டி அமைக்க டெண்டர் வெளியீடு!தீவிரப் புயலாக வலுப்பெற்றது அக்வான்!ஜம்மு-காஷ்மீரில் மோதல்! லஷ்கர்-இ-தொய்பா தளபதியை சுற்றிவளைத்த இந்திய ராணுவம்!தமிழக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடருக்கு வாய்ப்பில்லை? ஆற்று மணல் முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்பட 27 போ் பெயா்கள் வெளியீடு எஸ்ஐஆருக்கு எதிரான வழக்குகள்: டிச. 9-இல் உச்சநீதிமன்றம் விசாரணை பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்

ராகுலின் தொலைபேசி அழைப்பு! மு.க. ஸ்டாலின் விளக்கம்

புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அழைக்க ராகுல் தொலைபேசி அழைப்பு கொண்டாரா என்பது குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம் கொடுத்துள்ளார்.

congress vs dmk

ராகுல் காந்தி - மு.க. ஸ்டாலின் - ANI

Updated On :

காங்கிரஸ் தலைவர் ராகுல், என்னுடைய உதவியாளரிடம் சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி குறித்து தகவல் கொடுத்துள்ளார், நானும் சோனியாவுக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறேன் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சிக்கு, ராகுல் காந்தி தொலைபேசி அழைப்பு மேற்கொண்டது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று இந்த விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் புத்தக வெளியீடு குறித்த கேள்விக்கு, நான் சோனியாவுக்கு வாழ்த்துச் சொல்லியிருக்கிறேன், வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறேன் என்றார்.

தொடர்ந்து, காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடமிருந்து அழைப்பு வந்ததாக வரும் தகவல் குறித்த கேள்விக்கு, புத்தக வெளியீடு குறித்து அழைப்பிதழ் எதுவும் வரவில்லை. ஆனால், நிகழ்ச்சி குறித்து எனது உதவியாளரை செல்போனில் அழைத்து தகவல் தெரிவித்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.

இதன் மூலம், எம்.பி. ராகுல், மு.க. ஸ்டாலினை புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைக்க தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும், ஆனால், ஸ்டாலின் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை என்றும் வெளியாகி வந்த தகவல்களுக்கு ஸ்டாலின் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Summary

Rahul's phone call! M.K. Stalin's explanation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.