கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு எப்படியிருக்கிறார்? தகவல் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு!
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு எப்படியிருக்கிறார் என்பது குறித்த தகவல்களை வெளியிடக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு
வி.எஸ். பாபு - x / VS Babu
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நலம் குறித்து சட்டப்பூர்வமாக அளிக்கக் கூடிய தகவல்களை வெளியிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட செம்பியத்தைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி முதல், அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது, உடல்நிலை குறித்து அலுவல் ரீதியான தகவல்கள் ஏதும் வெளியிப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட உரிமை, கண்ணியம், தனி நபரின் ரகசிய மருத்துவ ஆவணங்கள் ஆகியவற்றை வெளியிடும்படி கேட்கவில்லை என்றும், சட்டப்படி அனுமதிக்கப்பட்ட தகவல்களை வெளியிடக் கோரி நவம்பர் 5 மற்றும் 12-ஆம் தேதிகளில் அரசுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து, சட்டப்படி வெளியிடக்கூடிய தகவல்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும், தொகுதி மக்களின் குறைகள், கோரிக்கைகள் இடையூறின்றி கவனிக்கப்படுவதை உறுதி செய்ய நிர்வாக ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
How is Kolathur MLA V.S. Babu doing? A case filed in court seeking information!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

