வ.உ.சி.யின் கொள்கைகளைப் பின்பற்றி முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்! முதல்வர் விஜய்!செம்மஞ்சேரியில் ஒலிம்பிக் சிட்டி அமைக்க டெண்டர் வெளியீடு!தீவிரப் புயலாக வலுப்பெற்றது அக்வான்!ஜம்மு-காஷ்மீரில் மோதல்! லஷ்கர்-இ-தொய்பா தளபதியை சுற்றிவளைத்த இந்திய ராணுவம்!தமிழக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடருக்கு வாய்ப்பில்லை? ஆற்று மணல் முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்பட 27 போ் பெயா்கள் வெளியீடு எஸ்ஐஆருக்கு எதிரான வழக்குகள்: டிச. 9-இல் உச்சநீதிமன்றம் விசாரணை பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்

ஜம்மு - காஷ்மீர் மசூதிக்குள் பதுங்கியிருந்த லஷ்கர்-இ-தொய்பா தளபதி என்கவுன்டர்!

ஜம்மு - காஷ்மீர் மசூதிக்குள் பதுங்கியிருந்த லஷ்கர்-இ-தொய்பா தளபதி என்கவுன்டர் செய்யப்பட்டது பற்றி...

lashkar

லஷ்கர்-இ-தொய்பா தளபதி லத்தீஃப் பட் - x

Updated On :

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தளபதி லத்தீஃப் பட்டை இந்திய ராணுவத்தினர் புதன்கிழமை காலை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.

ஜம்மு - காஷ்மீரின் குல்காமில் கடந்த நவ. 11 ஆம் தேதி அக்ரானில் உள்ள மத்திய ரிசர்வ் படை அதிகாரிகள் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் மூன்று இந்திய ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த உமர் நிசர் தார் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து குல்காம் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில், குல்காம் மாவட்டத்தில் உள்ள மசூதியில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தளபதியும் சமீபத்தில் என்கவுன்டர் செய்யப்பட்ட உமர் நிசரின் கூட்டாளியுமான லத்தீஃப் பட் மறைந்திருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மசூதியிலிருந்து வெளியேறி சரணடையுமாறு ஜம்மு - காஷ்மீர் காவல் கண்காணிப்பாளர் அனயத் அலி, விடியோ காலில் பயங்கரவாதியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த காணொலியை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

அந்த விடியோவில், “நாங்கள் இங்குதான் இருக்கிறோம்” என்று அந்த அதிகாரி கூறுவதும், அதற்கு லத்தீஃப், “நான் அல்லாவை சந்திக்க விரும்புகிறேன். நான் சந்தோஷமாக இருக்கிறேன்” என்று கூறுவதும் அதில் பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தினரும் சரணடைய பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அதிகாலை 2.45 மணியளவில் லத்தீஃப் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

அவர் சரணடைய மறுத்ததைத் தொடர்ந்து, அவரை மசூதியைவிட்டு வெளியே கொண்டு வருவதற்காக கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிப் பாதுகாப்புப் படையினர் நடவடிக்கையைத் தொடங்கினர்.

மசூதியைவிட்டு வெளியே வந்த லத்தீஃப்பை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை இந்திய ராணுவம் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Lashkar-e-Taiba commander, who was hiding inside a mosque in Jammu and Kashmir, killed in an encounter

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.