அரசு ஊழியர்களுக்கு நாளையே சம்பளம்! வங்கிகள் வேலை நிறுத்தம் எதிரொலி! திருவள்ளூர் அரசுப் பள்ளி காலை உணவில் பல்லி: 40 மாணவர்களுக்கு சிகிச்சைமதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு! ஜி.கே. வாசன்பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கு ரத்து!இடைத்தேர்தல்: ராஜிநாமா செய்தவர்கள் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி!செப். 26 முதல் காலாண்டு விடுமுறை! சிறப்பு வகுப்புகளுக்கு தடை! தமிழக அரசுஇடைத்தேர்தலில் தவெக பணப்பட்டுவாடா! தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!அமெரிக்காவில் சீன அதிபர்: விமான நிலையம் சென்று வரவேற்றார் டிரம்ப்!ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம்! ஜம்மு - காஷ்மீர் அரசு ஒப்புதல்!

ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம் வழங்கவுள்ளதாக ஜம்மு - காஷ்மீர் அரசு தெரிவித்திருப்பது பற்றி...

 LPG cylinders

சிலிண்டர்கள் - கோப்புப்படம்

Published On :

ஜம்மு - காஷ்மீரில் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த செப். 21 முதல் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், 'அந்த்யோதயா அன்ன யோஜனா' திட்டத்தில் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்துக்கு ஜம்மு - காஷ்மீர் அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் சதீஷ் சர்மா வியாழக்கிழமை சட்டப்பேரவையில் அறிவித்தார்.

ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது 6 சிலிண்டர்கள் என அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டனர்.

இதுதொடர்பாக ஜம்மு - காஷ்மீர் எதிர்க்கட்சித் தலைவர் சுனில் சர்மா பேசியதாவது:

“தேர்தல் சமயத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் 12 இலவச சிலிண்டர்களை வழங்குவதாக அரசு உறுதியளித்திருந்த நிலையில், தற்போது 'அந்த்யோதயா அன்ன யோஜனா' குடும்பங்களுக்கு மட்டும் ஆறு சிலிண்டர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டது. நீங்கள் மக்களை ஏமாற்றிவிட்டீர்கள். அனைவருக்கும் ஆறு சிலிண்டர்களைக் கூட வழங்காதது ஏழைகளுக்குச் செய்யும் துரோகம்.

மேலும், ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது” என்றும் கேள்வி எழுப்பினார்.

இதனால், ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.

Summary

6 free cylinders per year - Jammu & Kashmir government approves

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.