பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

ஐ.நா. கூட்டத்தில் மீண்டும் காஷ்மீர் விவகாரத்தைக் குறிப்பிட்ட துருக்கி அதிபர்!

நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொது அவைக் கூட்டத்தில் துருக்கி அதிபர் எர்டோகன் காஷ்மீர் விவகாரத்தைக் குறிப்பிட்டுள்ளார்...

Turkey's President Recep Tayyip Erdogan

ஐ.நா. பொது அவைக் கூட்டத்தில் உரையாற்றிய துருக்கி அதிபர் எர்டோகன்... - ஏபி

Published On :

நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொது அவைக் கூட்டத்தில் துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் மீண்டும் காஷ்மீர் விவகாரத்தைக் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொது அவையின் 81 ஆவது கூட்டத்தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியா உள்ளிட்ட ஏராளமான உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர்.

இந்தக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 22) பங்கேற்று உரையாற்றிய துருக்கி அதிபர் எர்டோகன் காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு தெற்காசிய பிரச்னைகளை ஐ.நா.வின் கட்டமைப்புகள் மூலம் பேச்சுவார்த்தைகள் நடத்தி தீர்க்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது:

“தெற்காசியாவின் காஷ்மீர் விவகாரம் உள்பட அனைத்துப் பிரச்னைகளும் ஐ.நா. அவையின் சாசனம் மற்றும் தீர்மானங்களின் கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டியது அவசியம்” எனக் கூறியுள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் தரப்பு தலையிட வேண்டாமென இந்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் முன்னிலையில் அதிபர் எர்டோகன் இந்த உரையை நிகழ்த்தியுள்ளார்.

ஏற்கெனவே, கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. அவைக் கூட்டத்தொடரில் காஷ்மீர் விவகாரத்தைப் பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென துருக்கி அதிபர் எர்டோகன் உரையாற்றினார்.

அவரது கருத்துகளை நிராகரித்த இந்திய அரசு, ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் முக்கியத்துவம் மிகுந்த பகுதி எனவும்; இதில், மூன்றாம் தரப்பும் தலையிட வேண்டாமெனவும் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Turkish President Erdoğan has once again raised the Kashmir issue while speaking at the United Nations General Assembly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.