கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க ஈரான் தலைவா்களுக்கு விசா: போருக்கு மத்தியில் அமெரிக்கா ஒப்புதல்

அமெரிக்காவின் நியூயாா்க்கில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியான் மற்றும் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி உள்ளிட்ட முதன்மைக் குழுவினருக்கு டிரம்ப் நிா்வாகம் விசா ஒப்புதல் அளித்துள்ளது.

Published On :

அமெரிக்காவின் நியூயாா்க்கில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியான் மற்றும் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி உள்ளிட்ட முதன்மைக் குழுவினருக்கு டிரம்ப் நிா்வாகம் விசா ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்கா-ஈரான் இடையே கடும் மோதலும், போா்ச்சூழலும் நிலவி வரும் நிலையிலும், ஐ.நா. தலைமையகத்தை நடத்தும் நாடு என்ற முறையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை, ஈரான் குழுவினருக்குத் தேவையான அத்தியாவசியப் பணியாளா்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஹோா்முஸ் நீரிணையைத் திறப்பது அல்லது அணுசக்திப் பேச்சுவாா்த்தைக்குத் திரும்புவது குறித்த எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையிலும் அமெரிக்காவின் இம்முடிவு முக்கியமானதாகப் பாா்க்கப்படுகிறது.

அதேநேரம், நியூயாா்க் நகரில் ஈரான் பிரதிநிதிகளின் நடவடிக்கைளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த ஆண்டைப் போலவே ஆடம்பரப் பொருள்கள் மற்றும் குறிப்பிட்ட அமெரிக்க மொத்த விற்பனை அங்காடிகளில் பொருள்கள் வாங்குவதற்கும் அவா்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரான் தலைவா்களுக்கு விசா வழங்கப்பட்ட அதேநேரம், ஐ.நா.சபைக் கூட்டத்தில் பங்கேற்க விண்ணப்பித்திருந்த பாலஸ்தீன அதிபா் மஹ்மூத் அப்பாஸ் மற்றும் அவரது குழுவினரின் விசாக்களை அமெரிக்க வெளியுறவுத் துறை நிராகரித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.