தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!

சென்செக்ஸ் 19.63 புள்ளிகள் சரிந்து 74,294.96 புள்ளிகளாகவும், நிஃப்டி 75.80 புள்ளிகள் 0.33 சதவீதம் உயர்ந்து 23,346.40 புள்ளிகளாக நிலைபெற்றது.

Published On :

மும்பை: கச்சா எண்ணெய் விலை சரிவு ஒருபுறம் சாதகமாக அமைந்தாலும், ஐடி மற்றும் டாடா குழுமப் பங்குகளின் பலவீனம் காரணமாக இன்றைய வர்த்தகத்தில், முக்கிய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கலவையான போக்கில் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

இன்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் 413.85 புள்ளிகள் உயர்ந்து 74,728.44 புள்ளிகளை எட்டிய நிலையில், வர்த்தகத்தின் இடையே 413.85 புள்ளிகள் உயர்ந்து 74,728.44 புள்ளிகளை எட்டியது. வர்த்தக முடிவில் ஏற்பட்ட சரிவால், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 19.63 புள்ளிகள் சரிந்து 74,294.96 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 75.80 புள்ளிகள் உயர்ந்து 23,346.40 புள்ளிகளாக நிலைபெற்றது.

டாடா குழுமத்தின் பெரும்பாலான பங்குகளின் விலை சரிவுடன் நிறைவடைந்த நிலையில், சென்செக்ஸில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 4.33 சதவீதமும், டைட்டன் 2.11 சதவீதமும், ஏசியன் பெயின்ட்ஸ் 2 சதவீதமும், மாருதி 1.98 சதவீதமும், டெக் மஹிந்திரா 1.82 சதவீதமும், டாடா ஸ்டீல் 1.73 சதவீதமும் சரிந்தன. மறுபுறம் அதானி போர்ட்ஸ், பவர் கிரிட், ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன.

பணவீக்கம், ரூபாய் மதிப்பு மற்றும் இந்தியாவின் இறக்குமதிச் செலவு குறித்த அச்சத்தின் நடுவில், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 103.3 டாலராகக் குறைந்தது ஓரளவு நிம்மதியை அளித்தாலும், ஆசியச் சந்தையின் ஏற்பட்ட சாதகமான சூழலால் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குகளில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டதால், இந்தியப் பங்குச் சந்தைகள் கலவையான போக்கில் நிறைவடைந்தன.

இருப்பினும், ஐடி மற்றும் டாடா குழுமப் பங்குகளின் பலவீனம் மற்றும் ஐபிஓ நிதித் திரட்டல் திசைதிருப்பப்பட்டதால், பங்குச் சந்தையின் ஒட்டுமொத்த மீட்சியை மட்டுப்படுத்தியது.

தேசிய பங்குச் சந்தை ரூ. 22,569 கோடி மதிப்பிலான பொதுப் பங்கு வெளியீட்டில், கிடைத்த உற்சாகமான வரவேற்பால், இரண்டாம் நாளிலேயே தனது சந்தாவை முழுவதுமாக பெற்றதாக தெரிவித்தது.

ஐரோப்பியச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகமானது. அமெரிக்கச் சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) உயர்ந்து நிறைவடைந்தன.

ஆசியச் சந்தைகளைப் பொறுத்தவரை, தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு ஆகியவை உயர்ந்தன.

தரவுகளின் அடிப்படையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வியாழக்கிழமையன்று ரூ. 3,208.76 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தனர்.

சர்வதேச 'பிரெண்ட்' கச்சா எண்ணெய் விலை 1.35 சதவீதம் சரிந்து, பீப்பாய் ஒன்றுக்கு 103.4 அமெரிக்க டாலாராக உள்ளது.

Summary

Benchmark equity indices Sensex and Nifty ended mixed on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER