
டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!
டாடா நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் ஏற்பட்ட மோதல் தீவிரமடைந்த நிலையில், முந்தைய அமர்வில் ஏற்றம் கண்ட முக்கிய டாடா குழுமப் பங்குகள், வெள்ளிக்கிழமையன்று சரிவுடன் முடிவடைந்தன.

நோயல் டாடா | என்.சந்திரசேகரன்
புதுதில்லி: இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள், செயல் தலைவர் என். சந்திரசேகரனுக்கு மீண்டும் பதவிக்காலத்திற்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, அதன் நிர்வாகக் குழுவில் ஏற்பட்ட மோதல் தீவிரமடைந்த நிலையில், முந்தைய அமர்வில் ஏற்றம் கண்ட முக்கிய டாடா குழுமப் பங்குகள் வெள்ளிக்கிழமையன்று சரிவுடன் முடிவடைந்த நிலையில், டாடா கெமிக்கல்ஸ் 11 சதவீதத்திற்கும் மேல் சரிந்தது அதிர்வலைகளை அனுப்பியது.
மும்பை பங்குச் சந்தையில், டாடா கெமிக்கல்ஸ் பங்குகள் 11.14 சதவீதமும், டாடா டெக்னாலஜிஸ் 4.65 சதவீதமும், டிசிஎஸ் 4.33 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் பேசஞ்சர் வெஹிக்கிள்ஸ் 3.45 சதவீதமும், டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் 2.32 சதவீதமும், டைட்டன் 2.11 சதவீதமும், டாடா ஸ்டீல் 1.73 சதவீதமும், டாடா எல்எக்ஸி 1.33 சதவீதமும், டாடா கம்யூனிகேஷன்ஸ் 1.10 சதவீதமும், டிரென்ட் 0.64 சதவீதம் மற்றும் வோல்டாஸ் 0.50 சதவீதம் சரிந்தன.
டிசிஎஸ் மிகப்பெரிய சரிவைச் சந்தித்த நிலையில், நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பு ரூ. 58,000 கோடிக்கும் மேல் சரிந்தது முதலீட்டாளர்களை அச்சத்தில் அழ்த்தியது.
டாடா குழுமப் பங்குகள் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) உயர்வுடன் முடிவடைந்தன. இதில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 7 சதவிகிதம் உயர்ந்தன.
சைரஸ் மிஸ்ட்ரி நீக்கப்பட்ட பிறகு, டாடா சன்ஸ் தனது மிக மோசமான நிர்வாகக் குழு நெருக்கடியில் சிக்கியது. என். சந்திரசேகரனை மேலும் ஐந்தாண்டு காலத்திற்கு நிர்வாகத் தலைவராக மீண்டும் நியமிக்க இயக்குநர்கள் வாக்களித்ததைத் தொடர்ந்து, டாடா டிரஸ்ட்ஸ் அந்தத் தீர்மானம் செல்லாதது என அறிவித்ததையடுத்து இந்த போராட்டம் தொடங்கியுள்ளது.
Summary
Major Tata Group stocks ended lower on Friday after advancing in the previous session.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






