இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

சென்செக்ஸ் 187.90 புள்ளிகள் சரிந்து 77,966.35 புள்ளிகளாகவும், நிஃப்டி 35.75 புள்ளிகள் சரிந்து 24,435.95 புள்ளிகளாக நிலைபெற்றது.

News image

Sensex - file picture

Updated On :27 வினாடிகள் முன்பு

மும்பை: டாடா சன்ஸ் தலைவர் பதவியிலிருந்து என். சந்திரசேகரன் விலகும் முடிவையடுத்து, டாடா குழுமப் பங்குகள் மீதான விற்பனை அழுத்தம் அதிகரித்ததால், இந்தியப் பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடுகள் இன்று தொடர்ந்து 2 வது நாளாக சரிவுடன் நிறைவடைந்தன. இதில் நிஃப்டி 24,400 புள்ளிகளுக்குக் கீழே சென்று நிறைவடைந்தது.

டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான 'டாடா சன்ஸ்' தலைவர் பதவியிலிருந்து, தனது தற்போதைய பதவிக்காலம் 2027 பிப்ரவரியில் முடிவடையும் போது விலகப்போவதாக என். சந்திரசேகரன் அறிவித்ததைத் தொடர்ந்து, பங்குச் சந்தைக் குறியீட்டில் இடம்பிடித்துள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் 3.71 சதவீதம் சரிந்தன. 63 வயதான சந்திரசேகரன் டாடா குழுமத்தில் 40 ஆண்டுகள் சேவை செய்துள்ளார். இதில் 2009 முதல் 2017 வரை டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக அவர் பணியாற்றிய காலமும் அடங்கும். இந்த அறிவிப்பால், டிசிஎஸ் 5% க்கும் அதிகமாகவும், டாடா மோட்டார்ஸ் சுமார் 3.3% மும், டைட்டன் மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை 2% க்கும் அதிகமாகவும் சரிந்தன.

தொடக்க வர்த்தகத்தில், கிடைத்த லாபத்தைத் தக்கவைக்க முடியாமல் முதல் பாதியில் பங்குச் சந்தை சரிந்தன. இதனையடுத்து, நிஃப்டி 24,300 புள்ளிகளுக்குக் கீழே சென்றது. இருப்பினும், வர்த்தகத்தின் கடைசி நேரத்தில் ஏற்பட்ட மீட்சியால், குறியீடு மீண்டு வர உதவியதுடன் நிஃப்டி 24,400 புள்ளிகளுக்கு மேல் சென்று நிறைவடைய இது வழிவகுத்தது.

வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 187.90 புள்ளிகள் சரிந்து 77,966.35 புள்ளிகளாகவும், நிஃப்டி 35.75 புள்ளிகள் சரிந்து 24,435.95 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, டாடா ஸ்டீல், லார்சன் & டூப்ரோ, எடர்னல் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய பங்குகள் சரிந்தும் மறுபுறம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பார்தி ஏர்டெல், அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் பவர் கிரிட் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன.

நிஃப்டி-யில் டிசிஎஸ், மேக்ஸ் ஹெல்த்கேர், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், எம்&எம் மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் சரிந்தும் மறுபுறம் ஹிண்டால்கோ, பார்தி ஏர்டெல், எஸ்பிஐ, ஜியோ ஃபைனான்சியல் மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆகிய பங்குகள் உயர்ந்தன.

நிஃப்டி-யில் துறைவாரியாகப் பார்க்கையில், பொதுத்துறை வங்கி குறியீடு 2.05 சதவீதமும், நிஃப்டி மீடியா 1.05 சதவீதமும், நிஃப்டி வங்கி 0.77 சதவீதமும், நிஃப்டி மெட்டல் 0.54 சதவீதம் உயர்ந்தன. மறுபுறம் ஐடி1.54 சதவீதமூம், இந்தியா விஐஎக்ஸ் 1.43 சதவீதமும், எஃப்எம்சிஜி 0.73 சதவீதமும் சரிந்தன.

நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 0.3% உயர்ந்த நிலையில், நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு சரிவுடன் நிறைவடைந்தன.

ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு 3.68 சதவீதம் உயர்ந்த நிலையில், ஜப்பானின் நிக்கெய் 225 மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடும் உயர்வுடன் முடிவடைந்தன. அதே நேரத்தில் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு சரிவுடன் நிலைபெற்றது.

ஐரோப்பிய சந்தைகள் பெரும்பாலும் நேர்மறையான நிலையில் வர்த்தகமான நிலையில், அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) சரிவுடன் நிறைவடைந்தன.

பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ. 258.55 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.

ஃபினோலெக்ஸ் கேபிள்ஸ், ஆதித்யா இன்ஃபோடெக், ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ், அபார் இண்டஸ்ட்ரீஸ், பெல்ரைஸ் இண்டஸ்ட்ரீஸ், போஷ், ஏதர் எனர்ஜி, சாய் லைஃப் சயின்சஸ், ஆனந்த் ரதி வெல்த், வெல்ஸ்பன் கார்ப், கேஇஐ இண்டஸ்ட்ரீஸ், சீமென்ஸ், டாக்டர் லால் பாத்லேப்ஸ், பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ், திவிஸ் லேபரட்டரீஸ், லென்ஸ்கார்ட் சொல்யூஷன்ஸ் மற்றும் ஏதர் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 160 மேற்பட்ட பங்குகள் இன்று 52 வார உச்சத்தைத் எட்டியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.