குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

புதிய உலக வரைபடத்தில் ஜம்மு - காஷ்மீர், லடாக்கை இந்திய வரைபடத்தின்படி காட்டவேண்டும்: வெளியுறவுத் துறை எச்சரிக்கை!

ஐ.நா.வால் உருவாக்கப்படும் உலக வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கை இந்தியாவின் அதிகாரப்பூர்வ வரைபடத்திற்கு உட்பட்டு காட்டவேண்டும் என்று இந்தியா எச்சரித்துள்ளது.

கோப்புப்படம் - AP

Published On :6 செப்டம்பர் 2026, 2:05 pm IST

ஐ.நா.வால் உருவாக்கப்படும் உலக வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கை இந்தியாவின் அதிகாரப்பூர்வ வரைபடத்திற்கு உட்பட்டு காட்டவேண்டும் என்று இந்தியா எச்சரித்துள்ளது.

உலக வரைபடத்தைச் சரிசெய்து, கண்டங்களின் நிலப்பரப்புகளை மிகவும் துல்லியமாகப் பிரதிநிதித்துவப்படுத்தி வரைபடத்தை மேம்படுத்த ஐ.நா. சபை கொண்டுவந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாக வாக்களித்தது.

’வரைபடத்தைச் சரிசெய்தல்: உலகளாவிய வரைபடக் கலைப் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைத்தல் மற்றும் உலகின் பிராந்தியங்களின், குறிப்பாக ஆப்பிரிக்காவின் சமமான பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பில் செப்டம்பர் 4 அன்று இத்தீர்மானம் ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்டது.

டோகோ நாட்டால் முன்மொழியப்பட்ட இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 164 நாடுகள் வாக்களித்தன. எஸ்டோனியா, ஜார்ஜியா, லிதுவேனியா, மால்டோவா, செர்பியா மற்றும் உக்ரைன் போன்ற நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்த நிலையில் அமெரிக்கா மட்டுமே இத்தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது.

இந்த நிலையில், ஐ.நா.வால் உருவாக்கப்படும் உலக வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கை இந்தியாவின் அதிகாரப்பூர்வ வரைபடத்திற்கு உட்பட்டு காட்டவேண்டும் என்றும் அவற்றைத் தவறாகச் சித்திரிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் இந்தியா எச்சரித்துள்ளது.

இந்திய வரைபடம் தொடர்பாக ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “கண்டங்களின் நிலப்பரப்பு சார்ந்த அளவுகளைப் பாதுகாக்கும் வகையில் சம - பரப்பளவு கொண்ட வரைபடங்களை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதே ஐ.நா. தீர்மானத்தின் நோக்கம்.

ஐ.நா. கொண்டு வந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாக வாக்களித்து, சம - பரப்பளவு கொண்ட உலக வரைபடத்துக்கான பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் அடிப்படைக் கொள்கையை வலியுறுத்தி வாக்களித்ததன் விளக்கத்தையும் கொடுத்துள்ளது.

இதில், இந்திய யூனியன் பிரதேசங்களான ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் உள்ளிட்ட இந்திய இறையாண்மைக்கு உட்பட்ட பகுதிகள், நமது அதிகாரப்பூர்வ வரைபடத்திற்கு ஏற்ப சித்தரிக்கப்பட வேண்டும். அவற்றின் துல்லியமற்ற அல்லது தவறாக வழிநடத்தும் எந்தவொரு சித்தரிப்பையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு தொடர்பான நமது நிலைப்பாடு சமரசத்திற்கு இடமின்றி தெளிவானது மற்றும் நிலையானது” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், “ஐ.நா. கொண்டு வந்துள்ள இந்தத் தீர்மானம் எந்தவொரு குறிப்பிட்ட உலக வரைபடத்தையும் ஏற்கவோ, அங்கீகரிக்கவோ இல்லை. அதேபோல, சர்வதேச எல்லைகள், சர்ச்சைக்குரிய பகுதிகள் அல்லது இடங்களின் பெயர்கள் போன்ற அரசியல் வரைபடவியல் பற்றி தீர்மானத்தில் எவ்விதக் குறிப்பும் அளிக்கப்படவில்லை" என்றும் அவர் குறிப்பிட்டார்.

Summary

Jammu & Kashmir and Ladakh must be depicted in accordance with India's map on the new world map: External Affairs Ministry warns.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.