அரசு ஊழியர்களுக்கு நாளையே சம்பளம்! வங்கிகள் வேலை நிறுத்தம் எதிரொலி! திருவள்ளூர் அரசுப் பள்ளி காலை உணவில் பல்லி: 40 மாணவர்களுக்கு சிகிச்சைமதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு! ஜி.கே. வாசன்பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கு ரத்து!இடைத்தேர்தல்: ராஜிநாமா செய்தவர்கள் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி!செப். 26 முதல் காலாண்டு விடுமுறை! சிறப்பு வகுப்புகளுக்கு தடை! தமிழக அரசுஇடைத்தேர்தலில் தவெக பணப்பட்டுவாடா! தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!அமெரிக்காவில் சீன அதிபர்: விமான நிலையம் சென்று வரவேற்றார் டிரம்ப்!ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

அரசு ஊழியர்களுக்கு நாளையே சம்பளம்! வங்கிகள் வேலை நிறுத்தம் எதிரொலி!

அரசு ஊழியர்களுக்கு நாளையே சம்பளம் வரவுவைக்கவிருப்பதாக வெளியான தகவல் பற்றி...

bank

பிரதிப் படம்

Published On :

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த எதிரொலியாக மத்திய அரசின் ஊழியர்களுக்கு நாளையே சம்பளத்தை வரவுவைக்க நிதியமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வாரத்திற்கு 5 நாள்கள் வேலை போன்ற முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் 90% பேரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான ஐக்கிய வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் செப். 28 முதல் 30-ஆம் தேதிவரை மூன்று நாள்களுக்கு நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முந்தைய நாள்களான செப். 26, 27 ஆகியவை வார இறுதி (சனி, ஞாயிறு) விடுமுறை நாள்களாகும். இதனால் தொடா்ந்து 5 நாள்கள் வங்கிகள் மூடப்பட்டால் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள் பெருமளவு பாதிக்கப்படும் நிலை உள்ளது.

இந்த நிலையில், மாதத்தின் கடைசி நாளான செப். 30 ஆம் தேதி புதன்கிழமை, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வரவுவைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் ஊழியர்களுக்கு நாளையே (செப். 25) இம்மாதத்துக்கான சம்பளம் வரவு வைப்பதற்கான ஏற்பாடுகளை நிதியமைச்சகம் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஓய்வூதியம் பெறும் மத்திய அரசின் முன்னாள் ஊழியர்களுக்கும் நாளையே சம்பளம் வரவுவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை.

மேலும், பொதுமக்களின் சிரமங்களை தவிர்க்க, செப். 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் பிராந்திய ஊரக வங்கிகளை திறக்க பாரத ரிசா்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதனால், வங்கிகள் மூலம் சம்பளம் வரவு வைக்கும் தனியார் நிறுவனங்கள், செப். 27 அன்றே தங்களின் ஊழியர்களுக்கு சம்பளம் அளிக்க வாய்ப்புள்ளது.

Summary

Government employees to receive salaries tomorrow! Impact of the bank strike!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.