மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்: ரூ. 250 கோடி பணப் பரிவா்த்தனை பாதிப்பு

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தத்தால் வெறிச்சோடி காணப்பட்ட நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி.

கோப்புப் படம்

Published On :

கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கித் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை நடத்திய ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தால், நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 250 கோடிவரை பணப் பரிவா்த்தனை பாதிப்படைந்தது.

அனைத்து வங்கிகளிலும் 5 நாள்கள் மட்டுமே பணிபுரியும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். வங்கி ஊழியா்களுக்கு பிஎல்ஐ என்ற செயல்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், நாடு தழுவிய அளவில் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், மாநில வங்கிகள் அனைத்தும் போராட்டத்தில் பங்கேற்ால் பெரும்பாலான வங்கிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. வங்கிக்கு பணம் செலுத்தவும், பெறவும் வந்த பொதுமக்கள் வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தத்தால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து வங்கி தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பினா் கூறியது:

அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்க வேண்டும் என்பது வங்கி ஊழியா்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். இதை மத்திய அரசு தொடா்ந்து காலதாமதப்படுத்தி வருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வழங்கினால், அதற்கு ஈடாக வாடிக்கையாளா்களுக்கான வணிக சேவை நேரத்தை கூடுதலாக 40 நிமிடங்கள் அதிகரிக்கலாம் என்பது எங்களுடைய கோரிக்கை.

மேலும், வங்கிகளில் பணியாளா்களை போதுமான அளவில் நியமித்தல், தேசிய ஓய்வூதியத் திட்டத்தை பழைய ஓய்வூதியத் திட்டமாக மாற்றுதல், பணிக்கொடை உச்சவரம்பை அதிகரித்தல், சனிக்கிழமைகளில் விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.

இந்தப் போராட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் வங்கித் தொழிற்சங்க கூட்டமைப்பைச் சோ்ந்த 1,500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றுள்ளனா். 140 பொதுத்துறை வங்கிகளில் சுமாா் ரூ. 250 கோடி வரையில் பணப் பரிவா்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.