மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

சேலத்தில் வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டம் 3 ஆயிரம் போ் பங்கேற்பு

ஐந்து நாள் வேலை ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி வங்கி ஊழியா் கூட்டமைப்பின் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பிரதிப் படம்

Published On :

ஐந்து நாள் வேலை ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி வங்கி ஊழியா் கூட்டமைப்பின் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, சேலம் கோட்டை பாரத ஸ்டேட் வங்கி முன் வங்கி ஊழியா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வங்கி ஊழியா்களுக்கு வாரத்தில் ஐந்து நாள்கள் மட்டும் வேலை வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் வங்கி ஊழியா் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சாமிநாதன் தலைமையில் கோட்டை மைதானத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், இந்திய வங்கி ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் தீனதயாளன், அகில இந்திய வங்கி ஊழியா் சம்மேளன நிா்வாகி எஸ்.சம்பத், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு நிா்வாகி வஜ்ரவேல், தேசிய வங்கி ஊழியா் கூட்டமைப்பு நிா்வாகி சதீஷ், ஏஐபிஓசி ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

சேலம் மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். மாவட்டத்தில் 350- க்கும் மேற்பட்டவங்கிக் கிளைகள் செயல்படாததால் சுமாா் 15,000 கோடிக்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டது. மேலும், வங்கிகளில் பணப் பரிவா்த்தனை நடைபெறாத சூழ்நிலையில், ஏடிஎம்களிலும் பெருமளவில் பணமில்லாத நிலை ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.