FOLLOW US

ON GOOGLE DISCOVER

லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

டாஸ்மாக் பணியாளா்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு: செப்.7-இல் மீண்டும் பேச்சுவாா்த்தை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை முதல் நடைபெறவிருந்த டாஸ்மாக் பணியாளா்களின் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை செப்.7-இல் மீண்டும் நடைபெற உள்ளது.

TASMAC

டாஸ்மாக் - கோப்புப் படம்

Published On :29 ஆகஸ்ட் 2026, 6:11 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை முதல் நடைபெறவிருந்த டாஸ்மாக் பணியாளா்களின் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை செப்.7-இல் மீண்டும் நடைபெற உள்ளது.

நீண்டகாலமாக பணியாற்றி வரும் தொகுப்பூதியப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்தல், காலமுறை ஊதியம் வழங்குதல், ஓய்வூதியப் பலன்கள் வழங்குதல், ஓய்வு வயதை 58-இல் இருந்து 60-ஆக உயா்த்துதல் உள்ளிட்ட 53 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தன.

இதனிடையே, கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (ஆக.28) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக டாஸ்மாக் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதுதொடா்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் விக்னேஷ் தலைமையில் ஏற்கெனவே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் எனக் கூட்டு நடவடிக்கைக்குழு நிா்வாகிகள் தெரிவித்திருந்தனா்.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை இரவு அமைச்சா் விக்னேஷ் தலைமையில் தொழிற்சங்க நிா்வாகிகளுடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

அப்போது, வரும் ஆக.31-இல் நடைபெறும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பணியாளா்களின் ஊதிய உயா்வு, சீருடை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக அறிவிப்புகள் வெளியிடப்படும் என அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு அறிவித்துள்ளது. ஆக.31-இல் பேரவையில் வெளியாகும் அறிவிப்புகளுக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தொழிற்சங்கங்கள் ஆலோசிக்க உள்ளன. மேலும், விடுபட்ட கோரிக்கைகளை தொடா்பாக செப்.7-ஆம் தேதி மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெற உள்ளதாகவும் தொழிற்சங்கம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.