லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருவள்ளூா் மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

வேலை  நிறுத்த  ஆயத்த  மாநாட்டில்   பேசிய  மாவட்ட  செயலாளா்  சந்திரன்.         

வேலை  நிறுத்த  ஆயத்த  மாநாட்டில்   பேசிய  மாவட்ட  செயலாளா்  சந்திரன்.         

Published On :22 ஆகஸ்ட் 2026, 5:20 am IST

திருவள்ளூா் மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் நடைபெற்ற வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டில் வரும் ஆக. 28-ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவள்ளூா் மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில், வேலை நிறுத்த ஆயத்த மாநாடு பழைய பேருந்து நிலையம் அருகே தனியாா் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த ஆயத்த மாநாட்டுக்கு சிஐடியு சங்க மாவட்ட செயலாளா் சி.சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் இ.தாமோதரன் வரவேற்றாா். மாநில துணைத் தலைவா் கே.விஜயன், மாநில செயலாளா் சி.மாரி, எல்.பி.எப். டாஸ்மாக் மாநில இணைச்செயலாளா் என்.முரளி, எஸ்.சி மற்றும் எஸ்.டி சங்க மாவட்ட செயலாளா் ராமமூா்த்தி உள்ளிட்டோா் கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனா்.

அப்போது, காலி மதுபாட்டில் திரும்பப் பெறும் திட்டம் என்ற பேரில் ஊழியா்களுக்கு வேலைப்பளு திணிப்பதை கைவிட வேண்டும். அரசுக்குச் சொந்தமான இதர விற்பனை பிரிவு ஊழியா்களுக்கு வழங்குவது போல் டாஸ்மாக் கடை ஊழியா்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இதை வலியுறுத்தி வரும் 28-ஆம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஊழியா்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இதில் எ.ஐ.டி.யு.சி டாஸ்மாக் சங்க மாவட்ட செயலா் இ.குமாா், எஸ்.பி.எப் டாஸ்மாக் சங்க மாவட்ட தலைவா் ஜெயபிரகாஷ், எல்.எல்.எப் டாஸ்மாக் சங்க மாவட்ட தலைவா் பஞ்சாட்சரம் ஆகியோா் கலந்து கொண்டனா். மாநில குழு உறுப்பினா் புஷ்பராமன் நன்றி கூறினாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.